தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு சேவை பிரிவில் காலியாக உள்ள ஆராய்ச்சி உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள்: ஆராய்ச்சி உதவியாளர் (தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு சேவை) – 26
சம்பளம்: மாதம் ரூ. 55,500 முதல் ரூ. 1,75,700 வரையில்
கல்வித் தகுதி : M.V.Sc (நுண்ணுயிரியல், பால் நுண்ணுயிரியல், நோயியல், ஒட்டுண்ணியியல், விலங்கு உயிரி தொழில்நுட்பம்) வகுப்பில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 12ஆம் வகுப்பில் தமிழை ஒரு பாடப்பிரிவாக கொண்டு தேர்ச்சி பெற்றிருத்தல் கட்டாயம்.
வயதுவரம்பு: 01.07.2019 தேதிப்படி 30 வயதுக்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பக் கட்டணமாக ரூ.150, தேர்வுக் கட்டணம் ரூ.200. குறிப்பிட்ட பிரிவினருக்கு கட்டண விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் தேதி: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.05.2019
விண்ணப்பிக்கும் முறை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்