நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 4 பேருக்கு பத்ம விபூஷன் விருது, 14 பேருக்கு பத்ம பூஷன் விருது , 94 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதில் தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் ஷரத் கமல், பங்காரு அடிகளார், சின்னப்பிள்ளை, நர்த்தகி நட்ராஜ், மருத்துவர் ஆர்.வி.ரமணி மற்றும் டிரம்ஸ் சிவமணி ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
பங்காரு அடிகளார் அவர்களுக்கு அவர்களுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பங்காரு அடிகளார், நடிகர் பிரபுதேவா, டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், பரதநாட்டிய கலைஞர் திருநங்கை நர்த்தகி நடராஜ், சமூகசேவகி மதுரை சின்னப்பிள்ளை, கண் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆர்.வி.ரமணி, டிரம்ஸ் இசைக்கலைஞர் சிவமணி, அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராமசாமி வெங்கடசாமி ஆகியோருக்கும் பாராட்டுக்களை அவர் தெரிவித்து கொண்டுள்ளார்.
 
மேலும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் தமிழகத்தில் இருந்து பத்மஸ்ரீ விருது பெற்ற மதுரை சின்னபுள்ள, டாக்டர்.R.V.ரமணி, டிரம்ஸ் சிவமணி, டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், டாக்டர். ராமசாமி வெங்கடசாமி மற்றும் பங்காரு அடிகளார் ஆகியோருக்கும் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். பத்மஸ்ரீ சகோதரி நர்த்தகி நடராஜுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.
 
ஆந்திர பிரதேசம் முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ஆகியோரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.