ஆயிரக்கணக்கான ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவு, மோடி அரசு கொண்டுவந்துள்ள நீட் நுழைவுத் தேர்வால் குறிப்பாக தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் சிதைந்து வருகிறது அதிர்ச்சி அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் தீவிரடமடைந்து வரும் நிலையிலும், இந்த ஆண்டிற்க்கான நீட் தேர்வு கட்டாயம் செப்டம்பரில் நடைபெறும் என மத்திய மோடி அரசு கூறியுள்ளது.

நீட் தேர்வு முறைகேடு, பண வசதி படைத்தவர்கள் மட்டுமே நீட் பயிற்சி பெற முடியும் உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் நீட் தேர்வு எழுத விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து குறைந்து கொண்டே செல்கிறது.

அதேபோல் நீட் தேர்வு எழுத முடியாத ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்களின் மரணங்களும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்நிலையில் 2020-2021 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வுக்காக தமிழகத்தில் இருந்து விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 17% குறைந்திருப்பது அதிர்ச்சியளித்துள்ளது.

இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஆண்டு தமிழகத்தில் 1,34,714 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த ஆண்டு 1,17,990 பேர் மட்டுமே நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளார்கள்.

ஆனால் பிகார் மாநிலத்தில் கடந்த ஆண்டை விட 28% பேரும், உத்தர பிரதேசத்தில் 16% பேரும் கூடுதலாக நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.

[su_image_carousel source=”media: 17095,17096″ crop=”none” columns=”2″ autoplay=”2″ image_size=”medium_large”]

இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க கோரி 7 மாநில முதலமைச்சர்கள் உச்சநீதிமன்றத்தை நாடுவதைப் போல ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கேரளா மற்றும் ஒடிசா ஆகிய மாநில முதலமைச்சர்களும் உச்சநீதிமன்றத்தை நாட வேண்டும் எனக் கோரி, அம்மாநில முதலமைச்சர்களுக்கு இன்று (ஆகஸ்ட் 27) திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: நீட் மற்றும் ஜேஇஇ நுழைவுத் தேர்வு; எதிர்க்கும் 7 மாநில முதல்வர்கள்