இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சமூக விலகல் மற்றும் மாஸ்க் அணிதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கை மூலமாக தான் நம்மை காத்துக் கொள்ள முடியும் எனக் கூறி, தமிழகத்தில் 7 கட்டமாக ஆகஸ்டு 30ம் தேதி வரை பல தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும், ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, தமிழகத்தில் இதுவரை அனுமதியின்றி வெளியே சுற்றியதாக, 6,94,180 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 358 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 9,96,812 லட்சம் பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஊரடங்கு விதிகளை மீறியதாக 8,99,911 லட்சம் வழக்குகள் பதிவாகி உள்ளது.
இந்நிலையில் உத்தரவை மீறியவர்களிடம் இருந்து இதுவரை ரூ.21.80 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க: இந்தியாவில் 31 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு; உலக அளவில் 2வது இடத்தை எட்டும் அபாயம்