முறைகேடாக சொத்து குவித்த ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றமும் பின்னர் உச்சநீதிமன்றமும் தண்டனை கொடுத்தது அனைவரும் அறிந்ததே..
ஜெயலலிதா தன் சொத்துக்கள் குறித்து உயில் எதுவும் எழுதி வைக்கவில்லை என்பதால் இந்த நிலையில் ஜெயலலிதாவின் ரூ.913 கோடி சொத்துக்களை நிர்வாகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் அதிமுக நிர்வாகி புகழேந்தி மனுதாக்கல் செய்தார்.
அதில் ஜெயலலிதாவின் ரத்த சம்பந்த வாரிசுகள் ஆன அவரின் அண்ணின் வாரிசுகள் தீபா, தீபக் ஆகியோர் 4 வாரத்தில் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கு 2014–ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தனிக்கோர்ட்டு விசாரணையின்போது நீதிபதி மைக்கேல் குன்ஹா முன்னிலையில் தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை குறைக்க கோரிய ஜெயலலிதா ‘
‘நான் அரசியலுக்கு வருவதற்கு முன்னரே வசதியாக இருந்தவள். செல்வசெழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்து, அந்தக் காலத்திலேயே திரைப்படங்களில் நடித்து பலகோடி ரூபாய்களை சம்பளமாக பெற்றவள். எனக்கென்று எந்த குடும்பமும் இல்லை. எந்த குடும்பத்துக்கும் சொத்து சேர்க்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. எனக்குள்ள ஒரே சொத்து தமிழக மக்கள்தான். நான் உழைத்து சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தும் தமிழக மக்களுக்கே. மக்கள் மன்றத்தில் என்னை சந்தித்து பகைதீர்க்க முடியாத அரசியல்வாதிகள், இந்த வழக்கின் மூலம் என்னை பழி தீர்த்துக் கொண்டிருக்கின்றனர். என்று கை கூப்பி கேட்டு கொண்டார்
ஆனால் ஜெயலலிதாவின் வேண்டுகோளை ஏற்காத நீதிபதி ஜெயலலிதாவை 4 வருடம் சிறை தண்டனையும் , 100 கோடி அபராதமும் கொடுத்து தண்டித்தார் .
இதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் மரணம் அடைந்தாலும் அவர் சொன்னப்படி அவரின் சொத்தை மக்களுக்கு எழுதி வைக்கவில்லை என்பதால் அவரின் அண்ணன் வாரிசுகளுக்கு இந்த சொத்து எப்படி போகும் என்ற காரணம் அறிய இந்த வழக்கால் பரபர்ப்பு இப்போது அதிமுகவினர் மத்தியில் கூடி உள்ளது ..