சிஏஏ போராட்டத்தில் பங்கேற்றதற்காக ஜேன்யூ மாணவிகள் இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்தினை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் 50க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்திற்கு காரணமானவர்கள் ஒருபோதும் தப்பிக்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அப்போது தெரிவித்திருந்தார்.
மேலும் 1984 சீக்கிய எதிர்ப்பு போராட்டத்திற்கு பின்னர் ஏற்பட்ட மிகப்பெரிய போராட்டமாக குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் பார்க்கப்படுகின்றது. வன்முறையானது 4 சதவிகிதத்திற்குள் கட்டுப்படுத்தப்பட்டு, 13 சதவிகித மக்கள் பாதிப்போடு 36 மணி நேரத்தில் டெல்லி காவல்துறை கட்டுப்படுத்தியது என அமித்ஷா குறிப்பிட்டிருந்தார்.
மேலும் வாசிக்க: சிக்கிம் தனிநாடு என விளம்பரம் செய்த டெல்லி அரசு- வெடித்தது சர்ச்சை
பிப்ரவரியில் ஜஃப்ராபாத் மெட்ரோ நிலையத்தில் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு உள்ளிருப்புப் போராட்டத்தை பெண்கள் தலைமைத்தாங்கி முன்னெடுத்தனர். இதில் பங்கேற்ற ஜவஹலால் நேரு பல்கலைக்கழகத்தின் இரண்டு மாணவிகள் தற்போது கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள தேவங்கனா கலிதா மற்றும் நடாஷா நர்வால் இருவர் மீதும் ஐபிசி (இந்திய தண்டனைச் சட்டம்) பிரிவு 186 (பொது ஊழியர்களின் பொதுச் செயல்பாடுகளைத் தடுப்பது) மற்றும் 353 (அரசு ஊழியரை தனது கடமையை நிறைவேற்றுவதைத் தடுப்பது) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
[su_carousel source=”media: 14055,14056″ limit=”100″ width=”700″ height=”400″ items=”1″ scroll=”2″ speed=”0″]
இதுவரை நாடு முழுவதும் 1.3 லட்சம் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,800க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் முடங்கியுள்ள நிலையில், டெல்லி காவல்துறையின் இந்த இரண்டு மாணவிகள் கைது நடவடிக்கைக்கு கடும் கண்டனங்கள் எழுந்துவருகின்றன.