உக்ரைனுக்கு 4 பேர் கொண்ட குழுவை அமைத்தது தொடர்பாக ஆக்கப்பூர்வமாக ஏதாவது பேசியிருக்கிறாரா என்றும் இன்டர்நேஷனல் பாலிடிக்ஸ் தெரியுமா மு.க.ஸ்டாலினுக்கு என்றெல்லாம் எடுத்தெறிந்து தரம் தாழ்ந்து பேசியிருக்கிறாரே திரு அண்ணாமலை அவர்கள்..

IFS எனப்படும் இந்திய அயலுறவு சேவைக்கு எடுக்க வேண்டிய மார்க்கை எடுக்க முடியாமல் தான்.. IAS எனப்படும் இந்திய ஆட்சியாளர்கள் சேவைக்கு எடுக்க வேண்டிய மார்க்க எடுக்க முடியாமல் தான்.. இவருக்கு பிடித்தமான மூன்றாம் இடமான IPS எனப்படும் இந்திய போலீஸ் சேவைக்கு இவர் வந்துள்ளார் என்பதை இவருக்கு யார் நினைவுபடுத்துவது என்றும் இனி கேட்பார்களே..

அதெல்லாம் சரி இவர் இப்படி தமிழ்நாட்டு முதல்வரை தரம் தாழ்ந்து விமர்சித்த போக்கினை பின்பற்றி அதே பாணியில் சர்வதேச பாலிடிக்ஸ் என்றால் என்ன என்று மாண்புமிகு மோடிக்கு தெரியுமா என்றும்..

தெரிந்தால் ஏன் அயலுறவுத் துறை அதிகாரிகள் பேச்சை மதிக்காமல் திடீரென பாகிஸ்தான் நவாஸ் ஷெரிப் அதிபர் வீட்டுக் கல்யாணத்துக்கு முந்திரி கொட்டையாக சென்ற மோடியை விமர்சிக்க துப்பு உண்டா அண்ணாமலைக்கு என்றும் கேட்பார்களே..

அயலுறவுத் துறை அதிகாரிகள் பேச்சை மதிக்காமல் அமெரிக்க அதிபர் தேர்தலில் மூக்கை நுழைத்து விட்டு தேவையில்லாமல் டிரம்புக்கு குட்டிக்கரணம் போட்டு..

இன்று அதனால் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ஆதரவை இழந்து அமெரிக்காவுக்கு சென்று அவமானப்பட்டு திரும்பிய மோடியை விமர்சிக்க துப்பு உண்டா அண்ணாமலைக்கு என்றும் கேட்பார்களே..

அதுமட்டுமா மார்ச் மாதம் 2015 ஆண்டில் மூன்று நாட்கள் சிசேல் தீவுக்கு என்ன காரணத்திற்காக இந்திய பிரதமராக மோடி சென்றார் என்றும்..

#nsescam மூன்று லட்சம் கோடிகள் ஊழல் செய்த சித்ரா ராமகிருஷ்ணாவை பற்றி விசாரிக்காமல் மூணு கோடி அபராதம் மட்டும் விதித்துவிட்டு அதன்பின் சாவகாசமாக சிபிஐ விசாரிக்க அனுப்பும் மோடியை விமர்சிக்க துப்பு உண்டா அண்ணாமலைக்கு என்றும் கேட்பார்களே..

அதுமட்டுமா அதானியை கங்காரு குட்டி போல் சுமந்துகொண்டு ஆஸ்திரேலியா செல்லும்போது ஸ்டேட் பேங்க் சேர்மன் அருந்ததி பட்டாச்சாரியா எதற்கு என்றும் கேட்பார்களே..

சார்க் நாடுகள் ஸ்ரீலங்கா நேபாள் பூட்டான் மாலத்தீவுகள் பாகிஸ்தான் பங்களாதேஷ் போன்ற நாடுகள் எல்லாம் இன்று இந்தியா சொல்வதை எதுவுமே ஏன் கேட்பதிவில்லை இதற்கு காரணம் என்ன என்று மோடியை விமர்சிக்க துப்பு உண்டா அண்ணாமலைக்கு என்றும் கேட்பார்களே..

இன்னும் முக்கியமாக ஸ்ரீலங்கா இந்தியாவிடம் தற்போது ஆயிரக்கணக்கான கோடிகளில் கடனை வாங்கிக் கொண்டிருக்கிறது. இருந்தபோதும் இந்திய மீனவர்களை அவர்கள் படகுகளை வாரத்துக்கு ஒருதரம் ஏன் பிடித்துச் செல்கிறது அதையாவது தட்டிக்கேட்டு மோடியை விமர்சிக்க துப்பு உண்டா அண்ணாமலைக்கு என்றும் கேட்பார்களே..

ஆசிய வர்த்தக கூட்டமைப்பில் ஜப்பான் ஆஸ்திரேலியா சீனா தாய்லாந்து மலேசியா சிங்கப்பூர் வியட்நாம் உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகள் பலவும் சேர்ந்து ஒன்றாக வர்த்தகம் செய்வோம் என ஏற்பட்ட உடன்படிக்கை கூட சேர முடியாமல் இந்தியா ஏன் வெளியேற்றப்பட்டு பரிதாபமாக இருக்கிறது என மோடியை விமர்சிக்க துப்பு உண்டா அண்ணாமலைக்கு என்றும் கேட்பார்களே..

இவ்வளவுக்குப் பின்னும் அண்ணாமலைக்கு சர்வதேச பொருளாதாரம் மற்றும் பாலிடிக்ஸ் பற்றி பேச திராணி இருந்தால் அவருடன் உயர்கல்வி MBA சர்வதேச பொருளாதாரத்தில் படித்து அதில் பல்கலைக்கழகத்தில் டிஸ்டிங்ஷன் வாங்கி, இந்தியா ஸ்ரீலங்கா வர்த்தக கூட்டமைப்பின் பொருளாளராக இருந்த அடியேனிடம் அயலுறவுத் துறையின் ஒன்றிய பாஜக அரசின் தோல்விகள் மற்றும்

மாண்புமிகு மோடி அவர்களின் மூன்று நாட்கள் மார்ச் 2015 ஆம் ஆண்டில் #schelleyes பயணம் குறித்து விவாதிக்க தயாரா என்றும்.. யார் அந்த ஹிமாலய துறவி என்பது பற்றியும்..

எழும் கேள்விகளுக்கு பதிலேதும் இல்லாத காரணத்தினால் சர்வதேச பொருளாதாரம் மற்றும் பாலிடிக்ஸ் பற்றி எதுவுமே தெரியாத பட்சத்தில் இவர் இனியும் காட்டு கத்து கத்தாமல்..

பிப்ரவரி மாதம் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக 60 கோடிகள் செலவழித்தும், அதில் அண்ணாமலை தொலைத்த 90% இடங்களில் டெப்பாசிட்டை எங்கே என்று விளக்கெண்ணெய ஊற்றி தேடுமாறு அவரை பணிவன்புடன் கோரும்..

படக் குறிப்பு: அயலுறவுத் துறை அதிகாரிகள் பேச்சை மதிக்காமல் மாண்புமிகு மோடி தான் தோன்றித்தனமாக வளைந்து குழைந்து நெளிந்து பாகிஸ்தான் அதிபர் வீட்டுக் கல்யாணத்துக்கு 25/12/2015 சென்ற போது..

https://www.facebook.com/savenra/posts/8052247164801136