நடிகர் விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சர்கார்’. சன்பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடந்த நவம்பர் 6 ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று, வசூலில் சாதனைப் படைத்து வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் இலவசப் பொருட்கள் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வரின் இயற்பெயர் ஆகியவற்றை விமர்சனம் செய்யும் விதமாக காட்சி உருவாக்கப்பட்டிருந்தது என்று கூறி அதிமுகவினர் கண்டனம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, அதிமுக தொண்டர்கள் சர்கார் படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகள் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு, பேனர்களை கிழித்து வன்முறை செய்தனர். மேலும், நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் தயாரிப்பு நிறுவனம் மீது அதிமுகவினர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கியதன் காரணமாக அதிமுகவினர் நடத்திய போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், சர்கார் படத்தின் படக்குழுவினர் சக்சஸ் மீட் நடத்தியுள்ளனர். இதில், ஏ.ஆர்.முருகதாஸ், விஜய், ஏ.ஆர்.ரஹ்மான், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், பாடலாசிரியர் விவேக் ஆகியோர் பலர் கலந்து கொண்டனர். இதில் படத்தில் நீக்கப்பட்ட காட்சிகளா அதிமுக கொடுத்து வரும் இலவசப் பொருட்களான மிக்சி, கிரைண்டர், மின்விசிறி போன்ற பொருட்களை கேக்கில் இடம் பெறச் செய்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்பு செய்திக்கு: கோமளவல்லி பெயரில் அதிமுகவை சீண்டும் சர்க்கார் படம் மீது அதிமுகவினர் கொதிப்பு