பசிபிக் பகுதியில் ”நெருப்பு வளையம்” என்று அழைக்கப்படும் குதிரை லாட வடிவ நிலவியல் பேரழிவு மண்டலம் ஒன்று காணப்படுகிறது. இது நியூஸிலாந்து தொடங்கி ஆசிய மற்றும் அமெரிக்க கடற்கரையோரமாக சிலியில் சென்று முடிகிறது. இந்தப்பகுதியில் பல நிலத்தட்டுகள் அமைந்துள்ளன. இந்தத் தட்டுகள் நகர்வதால் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இதே நிகழ்வு கடலுக்கு அடியில் ஏற்பட்டால் அதன் விளைவாக சுனாமி ஏற்படுகிறது. இது ஒரு இயற்கை நிலவியல் நிகழ்வு.
ஆனால் வழக்கதிற்க்கு மாறாக இந்த ஆண்டு ஜூலை முதல் நேர்று வரை 11,000 பூகம்பங்கள் வெவ்வெற் அளவில் ஏற்பட்டு உள்ளன. இது சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுத்துவதற்கான அறிகுறியாக இருக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
கடந்த 24 மணி நேரங்களில், பூமியின் 1.5 அளவைக் காட்டிலும் அதிகமான 149 பூகம்பங்கள் பூமியைத் தாக்கியது, இது மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான அறிகுறியாக இருக்கலாம் என நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
வெனிசுலாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரிக்டர் அளவில் 7.3 என பதிவான நிலநடுக்கத்தை அடுத்தே நிபுணர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர். மட்டுமின்றி சுமார் 69 நிலநடுக்கங்கள் நெருப்பு வளையம் என அழைக்கப்படும் அதிமுக்கிய பகுதியில் கடந்த 2 தினங்களில் பதிவாகியுள்ளது.
கடந்த ஏழு நாட்களில் 1,210 பூகம்பங்கள் மற்றும் 82.800 க்கும் மேற்பட்ட பூமியதிர்ச்சிகள் கடந்த ஆண்டு ஏற்பட்டு உள்ளது
வெனிசுலாவில் பதிவான நிலநடுக்கமானது மிகவும் சக்தி வாய்ந்தது எனவும், இதன் தாக்கம் கரீபியன் கடற்பகுதியான டிரினிடாட் மற்றும் டொபாகோ தீவிலும் கிரெனடா பகுதியிலும் பதிவாகியுள்ளது.
வெனிசுலாவை அடுத்து வனுவாட்டு நாட்டில் ரிகடர் அளவில் 6.7 என பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 15 முதல் 30 நொடிகள் நீண்ட அதிர்வுகள் ஏற்பட்டதாக கூறும் வனுவாட்டு அதிகாரிகள், பாதிப்பு எதுவும் இல்லை எனவும் தாங்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.அதேவேளையில் 6.3 என்ற ரிக்டர் அளவில் அடுத்த நிலநடுக்கமானது ஒரிகான் பகுதியில் பதிவாகியுள்ளது.இது அடுத்துவரவிருக்கும் பெரிய நிலநடுக்கத்திற்கான அறிகுறியாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
வெனிசுலாவை அடுத்து வனுவாட்டு நாட்டில் ரிகடர் அளவில் 6.7 என பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 15 முதல் 30 நொடிகள் நீண்ட அதிர்வுகள் ஏற்பட்டதாக கூறும் வனுவாட்டு அதிகாரிகள், பாதிப்பு எதுவும் இல்லை எனவும் தாங்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில் 6.3 என்ற ரிக்டர் அளவில் அடுத்த நிலநடுக்கமானது ஒரிகான் பகுதியில் பதிவாகியுள்ளது.இது அடுத்துவரவிருக்கும் பெரிய நிலநடுக்கத்திற்கான அறிகுறியாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். இது மட்டுமின்றி ஆசியா மற்றும் அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதியில் கடும் அபாயத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.