சேவ் தி சில்ட்ரன் மற்றும் யுனிசெப் இணைந்து நடத்திய ஆய்வில், உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார விளைவுகளால், இந்தாண்டின் இறுதிக்குள் 8.6 கோடி குழந்தைகள் வறுமையில் தள்ளக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து யுனிசெப் நிர்வாக இயக்குனர் ஹென்றிட்டா போர், குடும்பங்களிடையே நிதி நெருக்கடியின் அளவும், ஆழமும் குழந்தைகளை வறுமைக்கு தள்ளுகிறது என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். சேவ் தி சில்ட்ரன் தலைவர் இங்கர் ஆஷிங் கூறுகையில், குறுகிய கால பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் கூட குழந்தைகளின் முழு வாழ்க்கையையும் பாதிக்கக்கூடும், என்றார்.
[su_carousel source=”media: 14197,14196″ limit=”100″ width=”700″ height=”400″ items=”1″ scroll=”2″ speed=”0″]
இதனால், வறுமையினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டை காட்டிலும் 15% அதிகரித்து, 67.2 கோடியாக இருக்கும். இதில் மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகள் ஆப்ரிக்கா மற்றும் தெற்காசியாவில் இருப்பவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க: உணவு தண்ணீர் இல்லாமல் உயிரிழந்த தாய்; சடலத்துடன் விளையாடிய குழந்தை- புலம்பெயர் தொழிலாளர்களின் அவலம்