காலா இசை வெளியீட்டு விழாவின் போது கொடுத்த வாக்கை காற்றில் பறக்கவிட்டுள்ளார் ரஜினிகாந்த். அவர் மகள்களை விட வயதில் சிறியவர்களுடன் சேர்ந்து டூயட் பாடுகிறார். குறிப்பாக நண்பரின் மகளான சோனாக்ஷியுடன் அவர் ரொமான்ஸ் பண்ணியதை பார்த்தவர்கள் பலரும் விமர்சனம் செய்தனர்.
அதனையடுத்து, இனி தன் மகள்களை விட வயதில் சிறியவர்களுடன் டூயட் பாடுவது இல்லை என்று காலா இசை வெளியீட்டு விழாவில் ரஜினி அறிவித்தார். தலைவர் வயசுக்கு ஏற்ற மாதிரி தன்மையாக பேசியுள்ளார் என்று ரசிகர்கள் பெருமை அடைந்தனர். சொல்வதை தான் செய்வேன், செய்வதை தான் சொல்வேன் என்று கூறும் ரஜினி தான் கொடுத்த வாக்கை காற்றில் பறக்கவிட்டுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படத்தில் சீனியர்களான சிம்ரன், த்ரிஷா ஆகியோர் உள்ளனர். ஆனால் ரஜினியின் மகள்களை விட சின்னவரான மாளவிகா மோகனன் அவருக்கு ஜோடியாம். சிம்ரன் பிளாஷ்ஃபேக்கில் மட்டுமே வருகிறாராம். த்ரிஷாவின் கதாபாத்திரத்தை சஸ்பென்ஸாக வைத்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.
மாளவிகா மோகனன் ரஜினி படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டார். படக்குழு அடுத்த மாதம் ஐரோப்பா செல்கிறது. அங்கு மாளவிகா, ரஜினி டூயட் பாடலை படமாக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இதனால், ரஜினி கொடுத்த வாக்கை காப்பாற்றுவார் என்று எதிர்பார்த்தால் மீண்டும் தன் மகள்களை விட சிறிய வயது பெண்ணுடன் டூயட் பாடப் போகிறாரே என்ற விமர்சனம் எழுந்துள்ளது.