கொல்லபட்ட கனகராஜ் டிரைவரை ஜெயலலிதாவிடம் சேர்த்தது எடப்பாடி பழனிசாமி தான் என வெற்றிவேல் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சொன்ன நிலையில் ..
 
“என் தம்பி மரணத்துக்கு தமிழக முதலவர் எடப்பாடி தான் காரணம்” ஜெ டிரைவர் கனகராஜின் சகோதரர் தனபால் கதறிய நிலையில் ..
 
கனகராஜின் விபத்தை நேரில் பார்த்ததாக எந்த சாட்சிகளும் இல்லை. விபத்தில் உயிரிழந்த கனகராஜ் உடற்கூறு ஆய்வில் அவர் மது அருந்தியது தெரியவந்தது எனவும் , மேலும் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் உயிரிழந்தது விபத்துதான் என்று சேலம் சரக டிஐஜி செந்தில்குமார் தெரிவித்த நிலையில் ..
 
கொடநாடு எஸ்டேட்டில் Dedicated EB Supply இருந்த நிலையில் , ஒரு காவலர் கூட இல்லமால் இருந்தது எப்படி எனவும் .,,மேலும் காவலாளி கொலயின் போது CCTV கொடநாடு எஸ்டேட்டில் எப்படி வேலை செய்யமால் போனது எனவும் திமுக அதிரடியாக கேள்வி எழுப்பிய நிலையில் ..
 
சென்னை விமானநிலையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கொடநாடு எஸ்டேட் விவகாரம் குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் என கூறினார்.
 
தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் உள்ள பங்களாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ஆம் நால் ஒரு கும்பல் புகுந்து அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூரை கொலை செய்தது.
 
மற்றொரு காவலாளியான கிருஷ்ண பகதூரை தாக்கியது. பின்ன்ர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் சேலம் அருகே அடுத்த 4 தினத்தில் 28-04-2017 அன்று கார் விபத்தில் இறந்தார்.
 
மேலும் கொடநாடு எஸ்டேட்டில் உள்ளேசெண்டர் சயனின்  இளம் மனைவியும் சிறு பெண் குழந்தையும் விபத்தில் சிக்கி அடுத்த ஒரு நாளில் 29-04-2017 அன்றே கொல்லப்பட சினிமா பாணியில் தான் மட்டும் தப்பித்தாக சொன்னார் சயன் .
 
இதன் இடையே  அடுத்த மூன்று மாதத்தில் கொடநாடு எஸ்டேட் CCTV  ஆப்ரேட்டர் தினேஷ் கூட மர்ம மரணம் அடைய ..
 
சென்ற வாரத்தில் கொடநாடு எஸ்டேட் பங்களா கொலை தொடர்பான தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் ஒரு விடியோ காட்சித் தொகுப்பை கடந்த 11-ஆம் தேதி வெளியிட்டார்.
 
இந்த விடியோ காட்சியில்கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற சம்பவங்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குத் தொடர்பு இருப்பதாக அந்த விடியோவில் பேட்டியளிக்கும் சயன், மனோஜ் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் அதிமுக தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி ராஜன் சத்யா புகார் செய்தார்.
 
புகாரின் அடிப்படையில் சைபர் குற்றப்பிரிவு போலீஸார், மேத்யூ சாமுவேல், சயன், மனோஜ் ஆகியோர் மீது 3 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
 
இந்நிலையில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரையும் கைது செய்ய சென்னை தனிப்படை போலீஸார், புது தில்லிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றனர். அங்கு சயனையும், மனோஜையும் உடனடியாக கைது செய்தனர்.
 
பின்னர் 3 பேரையும் போலீஸார் நேற்று திங்கள்கிழமை அதிகாலை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்து மத்தியக் குற்றப்பிரிவு இணை ஆணையர் டி.எஸ்.அன்பு தலைமையிலான போலீஸார் பல கட்டங்களாக 11 மணி நேரம் விசாரணை செய்தனர்.
 
இந்நிலையில் இந்நிலையில் திங்கள் கிழமை நள்ளிரவு சைதாபேட்டை நீதிபதி வீட்டில் சயன், மனோஜ் இருவரையும் போலீஸார் ஆஜர்படுத்தினர். விசாரணையில் போதிய ஆதாரம் இல்லாததால் சயன், மனோஜ் இருவரையும் விடுவித்து நீதிபதி சரிதா உத்தரவிட்டார். மேலும் இருவரையும் வரும் 18 ஆம் தேதி ரூ.10 ஆயிரம் பிணையுடன் ஆஜராக உத்தரவிட்டார்.