மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பத்திரிகைகளில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. Presidential Awards of “Certificate of Honour” என்கிற விருதுக்கு விண்ணப்பிக்க கோருகிறது இந்த விளம்பரம்.
 
அதாவது செம்மொழிகளில் சிறந்து விளங்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு ரூ5 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும்.
 

உலகத்தின் தொன்மையான மொழியை ஏன் தொடர்ந்து அவமானபடுத்துகிறது நடுவண் அரசு என் கேள்விகள் ஏழ தொடங்கி உள்ளன

இந்த விளம்பரத்தில், சமஸ்கிருதம், பாலி, அரபிக், பெர்சியன், செம்மொழி ஒரியா, செம்மொழி கனடா, செம்மொழி தெலுகு, செம்மொழி மலையாளம் என பட்டியலிடப்பட்டுள்ளன. ஆனால் இதில் செம்மொழி தமிழ் இடம்பெறவில்லை.
 
மத்திய அரசு வழங்கும் செம்மொழிகளில் சிறந்து விளங்குபவர்களுக்கான ஜனாதிபதி விருதுகள் பட்டியலில் தமிழ் மொழிக்கு இடம் தராதது சமூக வலைதளத்திலே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
மோடியின் பாஜக அரசு அரசு ஆண்டுதோறும் வழங்கும் இந்த விருது தமிழுக்கு இத்தனை ஆண்டுகாலமாக புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளது. இதனை கண்டித்து கேள்வி எழுப்ப வேண்டிய மாநில அதிமுக அரசோ பாரதிக்கும்  பாஜக கட்சியின் சின்னமான காவியை வரைந்து வருகிறது என வருத்த பாடுகிறார்கள் கல்வி வல்லுனர்கள் 
 
இதனால் உலகத்தின் தொன்மையான மொழியை ஏன் தொடர்ந்து பாஜக அவமானபடுத்த வேண்டும் என  தமிழ் ஆர்வலர்கள் மோடி அரசின் மீது வருத்தமுடன் உள்ளனர்