கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி விதி எண் 370 விலக்கப்பட்டு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து பாஜக மோடி அரசால் ரத்து செய்யப்பட்டது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சி தலைவர்களும் காவலில் வைக்கப்பட்டு, மாநிலம் எங்கும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தபட்டது.
காஷ்மீர் முழுவதும் தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவையும் முழுமையாக துண்டித்தது பாஜக மோடி அரசு. பின்னர் காஷ்மீர் மக்களின் கடும் எதிர்ப்புக்கு பிறகு தடையை சிறிது சிறிதாக நீக்கி வருகிறது. நேற்றுடன் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஒரு வருடம் முடிவடந்ததையொட்டி பாஜகவினர் 15 நாட்கள் சிறப்பு கொண்டாடங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
இதனிடையே தேசிய மாநாட்டுக் கட்சி தலைவரும் முன்னாள் காஷ்மீர் மாநில முதல்வருமான ஃபரூக் அப்துல்லா எதிர்கட்சி தலைவர்களுடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். ஊரடங்கு காரணமாக அவர் தனது வீட்டுத் தோட்ட புல்வெளியில் இந்த சந்திப்பை நடத்தவிருந்தார். ஆனால் பாஜக மோடி அரசு அதற்கு அனுமதி மறுத்துள்ளது.
இதுகுறித்து ஃபரூக் அப்துல்லாவின் மகனும் முன்னாள் காஷ்மீர் முதல்வருமான உமர் அப்துல்லா தனது டிவிட்டரில், “ஒரு வருடம் ஆகிவிட்டது. இன்று எங்கள் குப்கார் சாலையில் வீட்டுக்கு எதிராக காவல்துரை வாகனங்கள் அணிவகுத்துள்ளன்ர். தெருவே கம்பியால் அடைக்கபட்டு யாரையும் அனுமதிப்பதில்லை. எனது தந்தை தற்போதைய நிலையைக் குறித்து விவாதிக்க முக்கியக் கட்சித் தலைவர்களை சந்திக்க விரும்பியது நடக்கவில்லை.
Clearly the meeting is not being allowed to go ahead. The BJP gets to announce a 15 day celebration to mark 5th Aug & a handful of us aren’t allowed to meet in my father’s lawn. So much for BJP national leaders wondering why there is no political activity.
— Omar Abdullah (@OmarAbdullah) August 5, 2020
இந்த சந்திப்புக்கு அரசு தடை விதித்துள்ளது. ஆகஸ்ட் 5 ஆம் தேதி சிறப்பு அந்தஸ்து ரத்தை 15 நாட்கள் கொண்டாட உள்ளதாக பாஜகவினரால் அறிவிக்க முடிகிறது. ஆனால் எங்களைப் போன்ற மிக சிலருக்கு ,எனது தந்தை எங்கள் தோடத்து புல்வெளியில் சந்திக்கொள்ள அனுமதி மறுக்கப்படுகிறது. ஆனால் அரசியல் நடவடிக்கைகளே இல்லாத நேரத்தில் பாஜக தேசிய தலைவர்களால் மாநிலம் எங்கும் சுற்றி வர முடிகிறது” என கடுமையாக விமர்சித்துள்ளார்.