காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
 
சென்னை கிண்டியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
 
சமூக நல்லிணக்கமே காங்கிரஸ் கட்சியின் முக்கிய நோக்கமாக உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கான திட்டங்கள் காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும்.
 
அதிக வேலை வாய்ப்பு தரக்கூடிய சிறு, நடுத்தர தொழில்கள் இப்போது பாதிக்கப்பட்டுள்ளன. சிறு, நடுத்தர தொழில்துறையை முன்னேற்றுவதன் மூலம் வேலைவாய்ப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.
 
நாட்டின் பயங்கரவாதத்தை விட வேலையின்மைதான் பெரிய பிரச்சனையாக மக்கள் கருதுகிறார்கள். வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் மோடி அரசு முற்றிலும் தோல்வி கண்டுவிட்டது.
 
புல்வாமாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடக்காமல் தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? இந்த தாக்குதல் நடத்திய ஜெய்ஷ் இ முகமதுவின் தலைவர் மசூத் அசாரை விடுவித்தது முந்தைய பாஜக தான்.
 
விவசாயிகளும், விவசாயமும் இல்லாத இந்தியா வலிமையாக இருக்காது என்பது காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உற்பத்தி மாநிலமான தமிழகத்தில் வேலை வாய்ப்பை உருவாக்க முயற்சிப்போம்.
 
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும். மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் ஏற்கனவே தள்ளுபடி செய்துவிட்டோம். மொழி, பண்பாடு ரீதியாக சிலரை புறக்கணித்து விட்டு நாட்டின் ஒட்டும்மொத்த வளர்ச்சி என்பது சத்தியமில்லை.
 
ரபேல் விவகாரத்தில் உண்மைகளை வெளிக்கொணர்ந்த இந்து பத்திரிகையை பாரட்டுகிறேன். நான் ஒவ்வொரு முறையும் செய்தியாளர்களை சந்திக்கிறேன். பிரதமர் மோடி சந்திக்கிறாரா
 
நாட்டின் பிரதமர் யார் என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள் பாஜக, ஆர்.எஸ்.க்கு எதிராக எதிர்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். விவசாயிகளும் விவசாயமும் இல்லாத இந்தியா வலிமையாக இருக்காது.
 
ரபேல் ஒப்பந்தம் குறித்து பாதுகாப்புத்துறை பேச்சுவார்த்தை நடத்தும்போது, பிரதமர் அலுவலகமும் பேசியது பிரச்சினை. ரபேல் விவகாரத்தில் விசாரணை நடந்தால் அனில் அம்பானியும், பிரதமரும் குற்றவாளிகள் ஆவார்கள்.
 
அனில் அம்பானிக்கு ரூ.30,000 கோடி ஒப்பந்தம் கிடைக்க பிரதமர் தலையிட்டு பேசி உள்ளார். ரபேல் ஒப்பந்தத்தில் உள்ள முறைகேடுகளையே காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது.
 
ரபேல் விவகாரத்தில் விமானத்தின் தரம், செயல்பாடு பற்றி காங்கிரஸ் கேள்வி எழுப்பவில்லை.
 
பிரதமர் யார் என்பதை மக்களின் மக்களிடம் திணிப்பதை அடாவடி செயலாக காங்கிரஸ் கருதுகிறது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து, மோடி, பாஜக, ஆர்.எஸ்.எஸ். என் மூன்றையும் எதிர்க்கிறோம்.
 
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் மீது தனிப்பட்ட கோபம் எதுவும் எனக்கு இல்லை. 7 பேர் விடுதலை குறித்து நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும்.
 
”மோடி ஒரு தவறு”என்ற தலைப்பில் கோபண்ணா எழுதிய புத்தகத்தை வெளியிட்டார். காவிரி விவகாரம் இரு மாநில அரசுகளும் பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனை.
 
நீட்தேர்வால் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளது. நீட் விவகாரத்தில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். உயர்கல்வி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதே பொறுத்தமானதாக இருக்கும்.
 
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு நாடாளுமன்றம் பேரவைகளில் 33% ஒதுக்கீடு வழங்கப்படும்.
 
எங்களது ஒரே இலக்கு பிரதமர் மோடியை தேர்தலில் வீழ்த்துவது தான்.காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது ரபேல் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும்.