ஏர்டெல், வோடபோன்-ஐடியா, ஜியோ உள்ளிட்ட மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள் தங்களது ரீசார்ஜ் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தி உள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் மொபைல் நெட்வொர்க்குகளாக ஏர்டெல், வோடபோன்-ஐடியா, ஜியோ (Airtel, Vodafone-Idea, Jio) ஆகியவை உள்ளன. இதில் ஏர்டெல் நிறுவனம் திடீரென தங்களது ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தியது.
இதனை தொடர்ந்து வோடபோன் நிறுவனமும் தங்களது ரீசார்ஜ் கட்டணங்களை 20 முதல் 25 சதவீதம் வரை உயர்த்தியது. தொடர்ச்சியாக ஜியோ நெட்வொர்க்கும் தங்களது ரீசார்ஜ் கட்டணங்களை 20 சதவீதம் வரை உயர்த்தியது.
இதில் ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியாவின் புதிய ரீசார்ஜ் கட்டணங்கள் கடந்த வாரம் முதல் அமலுக்கு வந்தன. ஜியோவின் புதிய ரீசார்ஜ் திட்டங்கள் டிசம்பர் 1 முதல் செயல்படத் தொடங்கும்.
இந்தியாவில் அதிகமான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த மூன்று மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களும் அடுத்தடுத்து ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தியது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதனால் பலரும் பிஎஸ்என்எல் (BSNL) நெட்வொர்க்குக்கு மாறியுள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதில் வேறு ஒரு நெட்வொர்க்குக்கு மாற வேண்டிய நேரம் வந்துவிட்டது என கூறி, சிலர் புதிதாக பிஎஸ்என்எல் சிம் வாங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.