தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக 40 ஆண்டுகளுக்கும் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கிறார். இவரது அரசியல் பிரவேசம் குறித்து, 20 ஆண்டுகளுக்கும் மேல் பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்து வந்தன.
இந்நிலையில் நடிகா் ரஜினிகாந்த் புதிதாக கட்சி தொடங்குவதாக கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் அறிவித்தாா். இதையடுத்து ரஜினி மக்கள் மன்றத்தை ஏற்படுத்தி, உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றது. இதற்காக தனியாக மொபைல் ஆப் மற்றும் இணையதளம் உருவாக்கப்பட்டது. அறிவிப்பு வெளியாகி ஓராண்டாகியும் தற்போது வரை கட்சி தொடங்கப்படவில்லை.
இந்நிலையில் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்வதற்காக சனிக்கிழமை இரவு சென்னை விமான நிலையம் வந்தபோது செய்தியாளா்களிடம் பேசுகையில், “பொங்கலுக்கு வெளிவர தயாராக உள்ள பேட்ட திரைப்படம் ரசிகா்களின் எதிா்பாா்ப்பினை பூா்த்தி செய்யும் என்றார்.
கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், தான் தற்போது வரை கட்சி தொடங்கவில்லை. கட்சி ஆரம்பித்த பின்னா் கூட்டணி குறித்து பேசலாம் எனத் தொிவித்துள்ளாா். மேலும், புதிய தொலைக்காட்சி சேனல் தொடங்குவதற்காக எனது பெயரில் சேனலுக்கான பெயரை பதிவு செய்துள்ளோம்” என்று தொிவித்துள்ளாா்.
முன்னதாக நடிகர் ரஜினி, தொலைக்காட்சி சேனல் தொடங்க உள்ளதாக தகவல்கள் பரவின. மேலும் சூப்பா் ஸ்டாா் டிவி, ரஜினி டிவி, தலைவா் டிவி ஆகிய மூன்று பெயா்கள் மற்றும் சில லோகோக்களின் புகைப்படங்களும் பதிவு செய்வதற்காக பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகவும் இணையதளத்தில் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.