புதுக்கோட்டை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கடும் தீவன தட்டுப்பாடு அதிகரித்து வருவதால் கால்நடை வளர்ப்போர் கேரள மாநிலத்திற்கு அடிமாட்டுக்கு விற்பனை செய்யும் அபாயம் உள்ளது.
 
புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து கிராமங்களில் கால்நடை வளர்ப்பு இருந்து வருவதால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதுக்கோட்டையில் சந்தை நடை பெறும். இந்த சந்தையில் கிராமங்களில் இருந்து விவசாயிகளிடம் வாங்கி வரப்படும் ஆடு, மாடுகளை விற்பனை செய்வார்கள்.
 
இதனால் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கால்நடை வியாபாரிகள் புதுக்கோட் டையில் ஒவ்வொரு வாரமும் வட்டமடித்து கொண்டு இருப்பார்கள்.
 
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் பால் மாடுகள் அதிக அளவில் வளர்க்கப்பட்டு வந்தது. இதனால் வெளிமாவட்டங்களில் இருந்து நல்ல கறவை மாடுகள் புதுக்கோட்டை சந்தைக்கு விற்பனைக்கு வந்தவண்ணம் இருந்தது.
 
புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் பல்வேறு வழிகளில் கால்நடைகளுக்கு தீவனங்கள் கிடைத்தது. குறிப்பாக நல்ல மழை பெய்தால் அனைத்து பகுதி களிலும் விவசாயம் நடைபெறும்.
 
இதனால் வைக்கோல் அதிக அளவில் கிடைத் தது. மேலும் போர்வெல், கிணறுகளில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் இருந்தால் அதனை பயன்படுத்து மேடான பகுதிகளில் கறவை மாடுகளுக்கு தேவையான தீவன புல்கள் வளர்த்தனர். இதனால் அதிக அளவில் கால்நடை வளர்ப்பின் மூலம் லாபம் அடைந்தனர்.
 
இதே போல் செம்மரி ஆடுகள் வளர்ப்பும் அதிகம் இருந்தது. செம்மரி ஆடு வளர்ப்போர்கள் வங்கியில் பணம் வைத்திருப்பது போல் இருந்தனர்.
 
ஏனென்றால் வீட்டில் திடீர் செலவு வந்தால் இரண்டு செம்மரிகிடாய் குட்டிகளை பிடித்து கறிக்கடையில் விற்பனை செய்துவிட்டு செலவுகளை சமாளித்தனர். இதனால் யாரிடமும் கடன் வாங்க வேண்டிய அவசமின்றி இருந்தனர்.
 
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து மழையின்றி வறட்சி ஏற்பட்டது. இதனால் போர்வெல், கிணறுகள் அனைத்தும் வற்றி விட்டது. நெல் விவசாயம் முற்றிலும் பாதிப்படைந்தது.
 
இதனால் வைக்கோல் உள்ளிட்ட எந்த தீவனமும் கால்நடைகளுக்கு கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரனூர், இலுப்பூர், விராலிமலை, பொன்ன மராவதி, திருமயம், கந்தர்வகோட்டை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து வறட்சியின் காரணமாக விவசாயம் முற்றிலும் பொய்த்து போய் விட்டது.
 
இதனால் கால் நடைகளுக்கு தேவையான வைக்கோல், புற்கள் என எதும் கிடைக்கவில்லை. மேலும் தரிசு நிலங்களில் புற்கள் அனைத்தும் கருகிவிட்டதால் அங்கும் கால் நடைகள் மேய்ச்சலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
 
இதனால் வேறுவழியின்றி கால்நடை வளர்ப்போர் சமாளிக்க முடியாமல் கேரளா மாநிலத்திற்கு அடிமாட்டுக்கு விற்பனை செய்யும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 
உரிய முறையில் கால்நடைகளுக்கு தீவனம் கிடைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: கால்நடை வளர்ப்பில் கடந்த 10 ஆண்டு களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் பிரபலமாக இருந்தது. கரவை மாடுகள், நாட்டு மாடுகள், உழவு மாடுகள் என அனைத்து தரப்பு கால் நடைகளும் புதுக்கோட்டை மாவட்டத்தில் வளர்க்கப்பட்டது.
 
இதனால் தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கால்நடை வியாபாரிகள் அதிக அளவில் வர தொடங்கினர். தொடர் வறட்சியால் கால்நடைகளுக்கு கிடைக்க வேண்டிய வைக்கோல், புற்கள் என அனைத்தும் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து குறைந்து கொண்டே இருக்கிறது.
 
குறிப்பாக இந்த ஆண்டு கஜாபுயல் பாதிப்பால் விவசாயம் முற்றிலும் பாதிப்படைந்தது. ஒரு சோலத்தட்டை கூட கால்நடைகளுக்கு தீவனமாக கிடைக்ககாத சூழ்நிலை ஏற்பட்டது. தீவனங்களை விவசாயிகள் தங்கள் நிலங்களில் இருந்து எடுத்தால்தான் கட்டுபடியாகும்.
 
காசுக்கு வாங்கினால் விவசாயிகளுக்கு எதுவும் கட்டுபடியாகாது. இந்நிலையில் இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள புயல் பாதிப்பு, வறட்சி ஆகியவற்றினால் கால்நடை களுக்கு தீவனம் கிடைக்கவில்லை. இன்னும் நாட்கள் ஆக ஆக கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படும்.
 
இதனால் நாங்கள் வளர்க்கும் கால்நடைகளுளை பட்டினிபோட மனம் வராது. இதனால் கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு வந்த விலைக்கு அடிமாட்டிற்கு விற்பனை செய்யும் முடிவு செய்துள்ளோம். எங்களுக்கு இதுதவிர வேறு தெரியவில்லை என்றனர்.
 
கால்நடை வளர்க்கும் விவசாயிகள் இரவு தூங்க போகும்முன் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு ஏதாவது தீவனம் போட்டுவிட்டு வந்தால்தான் எங்களு க்கு தூக்கமே வரும்.
 
ஆனால் இந்த ஆண்டு அதுபோல் செய்ய முடியாத அளவிற்கு தீவனதட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் எங்களுக்கு உரக்கமில்லை என்று வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.