கொரோனா நோயாளிகளுக்கு கங்கை நீர் தீர்வு அளிக்குமா என்பது குறித்த ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய ஜல்சக்தி அமைச்சகம் கொடுத்த ஆலோசனையை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ICMR) நிராகரித்துள்ளது.
உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பல நாடுகளும் மருத்துவத்துறையில் கடுமையாக முயற்சித்து வருகின்றன. அதில் சில நாடுகள் வெற்றி கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் வாசிக்க: கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்- இஸ்ரேல் விஞ்ஞானிகள் அசத்தல்
இந்நிலையில், மத்திய ஜல்சக்தி அமைச்சகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் கங்கை நீரை கொரோனா நோயாளிகளை குணப்படுத்த பயன்படுத்தலாமா என்பது குறித்த ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.
கொரோனாவை குணப்படுத்துவது தொடர்பாக ஏன் கங்கை நீரை ஆய்வுக்கு உட்படுத்தக் கூடாது என்று தேசிய கங்கை தூய்மை பணிக்குழுவுக்கு (National Mission for Clean Ganga- NMCG) தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்பட பலரும் ஆலோசனை வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து தேசிய சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனத்துடனும் (National Environmental Engineering Research Institute- NEERI) ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் செய்துள்ள ஆய்வில், பாக்டீரியா கிருமிகளைக் கொல்லும் வைரஸ்கள் கங்கை நீரில் இருப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால், வைரஸ்களைக் கொல்லுமா என்பதற்கான ஆதாரம் இதுவரை இல்லை என்று NEERI தெரிவித்துள்ளது.
கங்கை நீரில் நிஞ்சா வைரஸ் இருப்பதகாவும், இதைத்தான் ஆங்கிலத்தில் bacteriophages என்று விஞ்ஞானிகள் அழைப்பதாகவும், தேசிய கங்கை தூய்மை பணிக்குழு தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில்தான் வைரஸைக் கொல்லும் நோய் எதிர்ப்பு சக்தி கங்கை நீருக்கு இருக்கிறது என்று இந்திய மருத்துவ ஆய்வுக் குழுவுக்கு பரிந்துரைத்துள்ளது.
[su_slider source=”media: 13502,13503″ limit=”100″ width=”660″ height=”360″]
மேலும் வாசிக்க: எய்ம்ஸ் மருத்துவமனையின் திடீர் எச்சரிக்கையால் மக்கள் அச்சம்
மேலும் இந்த பரிசோதனையை பாகீரதி நதியின் தெஹ்ரியின் நீரோடை பகுதி மற்றும் அலக்நந்தா நதியின் ஸ்ரீநகர் நீரோடை பகுதி ஆகிய இடத்தில் நடத்தலாம் என்றும் பரிந்துரைத்துள்ளது. ஆனால், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் இதனை நிராகரித்துள்ளது..
இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் டீன் டாக்டர் குப்தா கூறுகையில், ”தற்போது கிடைத்து இருக்கும் ஆய்வுகளின்படி, கங்கை நீரை ஆய்வு கூடத்தில் ஆய்வு செய்வதற்கான எந்த முகாந்திரமும் இல்லை, எந்த வகையிலும் மாற்று உரு செய்தும் இந்த நீரை பயன்படுத்த முடியாது. அறிவியல் பூர்வமான, வலுவான ஆதாரங்கள் கிடைக்க வேண்டும்” என்று நிராகரித்துவிட்டதாக டாக்டர் குப்தா கூறியுள்ளார்.