அரசியல் கட்சியின் மூத்த தலைவர்களையும் செய்தியாளர்களையும் ஒருமையில் விளித்து தேமுதிக பொருளாளர் பிரமலதா இன்று மிக ஆணவமாக நடந்து கொண்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழத்தியது 
 
திமுகவின் பொருளாளர் துரைமுருகன் விவரித்த நேற்றைய சம்பவங்களை அவரால் முற்றிலுமாக மறுக்க இயலவில்லை. மேலும் ஒரே நேரத்தில் இரண்டு துருவ கட்சிகளோடு கூட்டணி பேசியதையும் மறுக்க அவரிடம் வலுவான வாதங்கள் இல்லை.
 
மாறாக மூத்த அரசியல்வாதியான துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து தேமுதிக நிர்வாகிகள் தன்னிடம் பேசியதை வெளிப்படுத்தியதைக் ஒருமையில் அவரை பேச செய்தியாளார்கள் முகம் சுளித்தனர்..
 
அரசியல் கட்சியோடு சேர்த்து தொலைக்காட்சியையும் நடத்துவதால் செய்தியாளர்களை தனது ஊழியர்கள் போல பாவித்து ஒருமையில் தொடர்ந்து பேச ., கேள்வி கேட்கும் செய்தியாளர் எந்த ஊடகத்தைச் சேர்ந்தவர் என்ற கேள்வி கேட்டு தொடர்ந்து நிருபர்களை ஒருமையில் விளிக்க   ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் நிருபர்கள் எதிர்த்து கேள்வி எழுப்ப.,  தனக்கு காது கேட்கவில்லை என சைகயில் கூறி பூனைகுட்டியாக பம்மி கொண்டார் பிரமலதா..
 
அதன் பிறகு அடங்கி போன பிரமலதா மரியாதையாக பேசலானார்,
 
நேற்று செய்தியில் கூட்டத்தில் சிக்கி திணறிய பிரமலதாவின் தம்பியும் தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் இன்று, தனது கட்சியின் பொருளாளரும் அக்காவுமான பிரேமலதாவின் பின் நின்று பவ்யாமக கைகாட்டி தன்னைப் பாதுகாத்துக் கொண்டது குறிப்பிடதக்கது. 
 
மோகன்ராஜ், அனகை முருகேசன் துரைமுருகனை சந்திக்க சென்றதை மறுக்கவில்லை பிரேமலதா. அவர்கள் பேசியது கூட்டணிக்காகவா இல்லை சம்பந்தம் பேசவா என்பதை தெளிவுபடுத்தவும் இல்லை.மேலும் செய்தியாளார்கள் கேக்க தேமுதிக கொள்கை என்ன கேள்விக்கு கடைசி வரை அவரிடம் பதிலும் இல்லை
 
துரைமுருகன் தேமுதிகவிம் இரட்டை நிலைப்பாட்டை போட்டுடைத்ததால் கடுப்பாகி, திமுகவை “தில்லு முல்லு கட்சி” என வர்ணித்த பிரேமலாதா அதிமுகவையும் ஜெயலலிதாவையும் விட்டு வைக்கவில்லை.
 
தேமுதிகவின் தயவால் ஆட்சியில் அதிமுக இருப்பதாகக் கூறியவர், தனித்து நின்று 37 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்ற ஜெயலலிதா மத்திய அரசிடமிருந்து தமிழ் நாட்டுக்கு பெற்று தந்து செய்த சாதனை என்ன என்றும் கோபத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
ஜெயலலிதா தனியாக நின்று 37 நாடாளுமன்ற தொகுதிகளை வென்று தேசிய அளவில் மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றது பயனற்றது என்றும் குத்தி காட்டி பேசியுள்ளார். இவை அனைத்தும் நேரலையில் அனைத்து தொலைக்காட்சிகளும் வெளியிட்டன.
 
அதைப் போலவே ஜெயலலிதாவை தைரியமாக எதிர்த்த விஜயகாந்தின் வீரத்தைச் சிலாகித்தார் பிரேமலதா. அதிமுக கூட்டணிப் பேச்சுவார்த்தை இன்றோடு முடியும் என்று கருத்து தெரிவித்து வரும் போது இன்னும் இரண்டு நாள் கழித்தே தேமுதிக அதிகாரப் பூர்வ அறிவிப்பை வெளியிடும் என அதிமுக தேமுதிக கூட்டணியை  மேலும் குழப்பினார்   பிரேமலதா.
 
இதற்கெல்லாம் பிறகும் அதிமுக நிர்வாகிகள் தேமுதிகவுடன் கூட்டணி வைக்கப் போகிறார்களா  அவ்வாறே வைத்தாலும் நிர்வாகிகளுக்கிடையே வேண்டுமானால் சமரசம் இருக்கும், ஆனால்  மானமுள்ள அதிமுக தொண்டன் களத்தில் தேமுதிகவை சுண்டு விரலாலும் சீண்டடுவனா எனற கேள்வி நிருபர்கள் மத்தியில் எழுந்துள்ளது ..

 

மொத்தத்தில் இன்று பிரமலதா ஆணவமாக ஆரம்பித்த செய்தியாளர்கள் சந்திப்பு பின்னர் தன்னிலை விளக்கமாக அமைந்து  பரிதாபமாக முடிவுக்கு வந்தது  ..