இன்று (17.10.2021) காலையில் சுமார் ஏழரை மணி அளவில் காரை ஓட்டிக்கொண்டு சூளைமேடு தாண்டி ஹாரிங்டன் ரோடு தரைப்பாலம் நோக்கி செல்லும் பாதையில்..

திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் பாடிய சோகப் பாட்டு தரைப்பாலம் நுழையும்முன் பந்தல் கட்டிய ஸ்பீக்கரில் காது கிழியும் படி கேட்டது.. உரைப்பார் அழுவார் துடிப்பார் அழுவார் யார் யாரோ நான் யார் நீ யார் நீ யார் நாலும் தெரிந்தவர் யார் யார்..

பாட்டு வந்த திசையை நோக்கி யாரும் இறந்து விட்டார்களா என்று பார்த்தேன் அந்த மாதிரி எந்த அறிகுறியும் இல்லை அதிமுக கொடி போட்ட பந்தல் பக்கத்திலே..

பந்தல் உள்ளே #எம்ஜிஆர் #ஜெயலலிதா படத்துடன். . எங்கு தேடினாலும் அதிமுகவில் உள்ள அண்ணாவை எங்கும் காணோம். .திடீரென டவுட் வந்து இன்று ஒருவேளை டிசம்பர் 24 என மொபைல் அமுக்கி பார்த்தேன் இல்லை அக்டோபர் 17 அது காட்டியது..

அதிமுக தொடங்கி 50 ஆண்டுகள் ஆன பொன்விழா ஆண்டில்.. இன்றைய நாளில் மகிழ்ச்சி பாடல்கள் தானே போட வேண்டும் ஏன் சோக பாடல்கள் என்றார் அருகில் அமர்ந்திருந்தவர் ஆற்றாமை தாங்காமல்..

தரை பாலத்தை கடந்து கொண்டே திரும்பி அவர் பக்கம் பார்க்காமல் மெலிதாக சொன்னேன் அந்த #அதிமுக காரர் சரியான பாட்டு தான் போட்டிருக்கிறார்..

அடங்க மாட்டீர்களா என்றார் குரலில் சூடேற்றி அருகில் இருந்த எனது நெடுநாளைய அதிமுக நண்பர் தற்போது அக்கட்சியில் மிக முக்கிய பொறுப்பில் உள்ளவர். .

10 வருடம் அடக்கி வைத்திருந்தது டோட்டல் வாஷ் அவுட்டாகி 9 மாவட்டங்களில் தேர்தல் நடந்த அனைத்து மாவட்ட ஊராட்சி மற்றும் கிராம ஊராட்சிகள் வரலாறு காணாத விதமாக #திமுக 95% கைப்பற்ற காரணமாக அமைந்தது என்றேன்..

இந்த முறை அவர் கண்ணை ஊடுருவி.. ஆமோதிக்கும் விதமாக அவர் தலையசைக்க அமைதியாக ஆட்கள் அதிகமில்லாத சென்னை சாலைகளில் பயணம் தொடர்ந்தது.. அஞ்சு கிலோ மீட்டர் தாண்டி வீடு வரும் வழியில் தென்பட்ட ஒரே ஒரு போஸ்டரில் எம்ஜிஆர் எதுவும் பேசவில்லை..

எப்படி பார்த்து பார்த்து ரசித்து வளர்த்தேன் அதிமுக கட்சிய, இப்படி ஆக்கிட்டீங்களேடா பிளடி ராஸ்கல்ஸ் .. சினிமாவில் அழவே தெரியாத எம்ஜிஆர் அழுதபடியே பேசியது போல தோன்றியது..
நிற்க..

மூன்றாம் பிறை என்று ஒரு படம் வந்தது அந்த படத்தில் நடித்ததற்காக கமலஹாசனுக்கு சிறந்த நடிகர் அகில இந்திய அவார்டு கிடைத்தது.. எம்ஜிஆர் அவர்கள் மக்கள் பிரச்சனையை நித்தமும் நினைத்து மக்களுக்காக வாடி வருந்தி ஆட்சி செலுத்திக் கொண்டிருந்த பொற்காலம் என்பார்கள் எம்ஜிஆரின் ரசிகர்கள். .

இப்படிப்பட்ட காலத்திலே மூன்றாம் பிறை படத்தில் பைத்தியமாக சிறப்பாக நடித்த ஸ்ரீதேவிக்கு எப்படி அவார்டு கொடுக்காமல் போகலாம் என்று மிகவும் கோபமாகி அவரே பிரஸை கூட்டி பேட்டியளித்து.. அவரே ஒரு விழாவை ஏற்பாடு செய்து அவரே அதை அரசு விழாவாக கொண்டாடி..

தமிழக அரசின் சார்பில் சிறந்த நடிகையாக ஸ்ரீதேவி அறிவித்து.. இணைத்துள்ள இந்த படத்தில் கமலை பின் தள்ளிவிட்டு அண்ணாயிசத்தை பற்றி அன்றைய பிரபல கதாநாயகி ஸ்ரீதேவியிடம் விளக்கும் காட்சியா என்று மட்டும் கேட்காதீர்கள்..

காரணம் எம்ஜிஆர் அடிக்கடி பேசும் அண்ணாயிசத்தை அவர் ஒருவேளை விளக்காமல் அத்தகைய அரசு விழாவில் இருந்தும் இருக்கலாம்.. ஆனாலும் ஏழைகளுக்காக நித்தமும் அவர் பாடுபட்டு உழைக்கும் நோக்கத்தினை நிச்சயம் ஸ்ரீதேவிக்கு அந்த விழாவில் விளக்கியும் இருந்திருக்கலாம் அல்லவா..

சரி அன்றைய பிரபல நடிகை ஸ்ரீதேவிக்கு விளக்கி அவர் அதன்பின் என்ன கிழித்தார் என்று மட்டும் கிடுக்கிப்பிடி போட்டு மறுபடியும் கேள்விகளை கேட்டு விடாதீர்கள்..

நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார் என்று பாடி ஓட்டுகளை வாங்கி குவித்த.. கொடுத்து கொடுத்து சிவந்த கரம் வள்ளல் சேவையை அதனால் புரட்சித்தலைவர் பெற்ற புகழை நீங்கள் முழுவதுமாக அறியவில்லை..

மேலும் இந்த நிகழ்வு நடந்து சுமார் நான்கு வருடம் கழித்து காலத்தில் அம்பிகா ராதா என இரு கேரளா நடிகைகள் மிக பிரபலமாக இருந்த காலத்தில்.. அவர்களுக்காக தற்போதைய 1200 கோடி மதிப்பிலான சுமார் 57 ஏக்கர் வளசரவாக்கத்தில் அரசு நிலத்தை தானம் செய்தது ஏன் என்றும் கேட்காதீர்கள். .

ஏன் பிரபல நடிகைகள் என்றால் ஏழைகளாக இருக்கக் கூடாதா.. ஏழைகள் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் அவர் ஆணையிட ஏழைகள் கண்ணீர்க் கடலிலே விழ மாட்டார்கள் என்று சாட்டையை சுழற்றிய படி பாடியதை அதற்குள் மறந்து விட்டீர்களா..

இந்த பதிவின் சாராம்சமே அண்ணாவை கொடியில் வைத்து அண்ணாயிசம் பேசிய எம்ஜிஆரை பின்பற்றி. .
வாழ்ந்து கொண்டிருக்கும் தற்கால கொள்கைப் பிடிப்புள்ள அதிமுகவினருக்கு, ஐம்பது ஆண்டு பொன்விழா வாழ்த்துக்கள் தெரிவிக்கும் நோக்கம் மட்டுமே சார்ந்தது எனக் கூறி அமர்கிறேன் 🙏

https://www.facebook.com/savenra/posts/7194993073859887