விழுப்புரம் அதிமுக எம்.பி ராஜேந்திரன் சாலை விபத்தில் உயிரிழந்தார். திண்டிவனத்தில் ராஜேந்திரன் சென்ற கார், சாலைத்தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. கார் விபத்தில் எம்.பி ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 
திண்டிவனம் அடுத்துள்ள ஆதனபாட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.
 
இவர் ஜக்கம்பேட்டையில் உள்ள விருந்தினர் மாளிகையில் நேற்று முதல்வருடன் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது ஓய்வு எடுத்துவிட்டு தனது இண்டிகோ காரில் தனது ஓட்டுநர் அன்புச்செல்வன் என்பவருடன் தமது உறவினரும் ஆசிரியருமான தமிழ்செல்வம் என்பவருடனும் காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
 
அப்போது திண்டிவனம் சாலையில் தற்போது அமைக்கப்பட்டு வரும் சாலை தடுப்பு சுவர் மீது கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இந்த சம்பவ இடத்திலேயே எம்.பி ராஜேந்திரன் உயிரிழந்தார். உயிரிழந்த ராஜேந்திரன் உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
 
விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த தமிழ்செல்வன் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தை நேரில் பார்த்த சட்டத்துறை அமைச்சர் சண்முகம் உயிரிழந்த ராஜேந்திரன் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்