டெல்லியில் பா.ஜ.க-வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியிடம் சில கேள்விகளை முன்வைத்துள்ளனர். அதில் என் கருத்தை பாஜகவில் யார் கேக்குறா என்ற ரீதியில் சுவாமி புலம்யுள்ளார் 
 
அதன் விவரம் பிவருமாறு :
 
சசிகலா என்றால் டி.டி.வி. தினகரனுடனா?
“சசிகலாதான் டி.டி.வி தினகரன், சசிகலா இல்லாவிட்டால் டி.டி.வி தினகரனுக்கு ஒன்றுமே இல்லை.”
 
அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தால் பா.ஜ.க எத்தனை சீட்டுகள் வெல்வார்கள்?
“அது எனக்குத் தெரியாது. நான் கவனிக்கவே இல்லை”
 
அ.தி.மு.க கூட்டணி வெல்லாது என்கிறீர்களா?
“அது எனக்குத் தெரியாது. இதுகுறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. யாரும் என்னிடம் கேட்கவும் இல்லை, நானும் யாரிடமும் கேட்கவும் முயற்சி எடுக்கவுமில்லை.”
 
உங்கள் யோசனை என்ன?
“பா.ஜ.க தேர்தலில் நின்றால் தனியாக நிற்கணும். இல்லாவிட்டால் சசிகலாவுடன் கூட்டணி வைக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி கிடைக்கும். வெற்றிக்காக இரண்டு தேர்தல் தோற்றுப்போனாலும் பரவாயில்லை.”
 
தி.மு.க கூட்டணி எப்படி உள்ளது?
“பா.ஜ.க-வின் ஓட்டு பிரிந்துபோனால் அவர்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.”
 
தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி எப்படி வலுவாக உள்ளதா?
“அப்படியெல்லாம் இல்லை. நமது முட்டாள் தனத்தால் ஓட்டைப் பிரித்துக்கொடுத்தால் நடக்கும். சசிகலா, தினகரன் பா.ஜ.க கூட்டணி தி.மு.க கூட்டணியை எதிர்த்து நின்றால் சசிகலா டீம் வெல்லும். 40-ல் 30 இடங்களை வெல்வார்கள்.
 
ஆனால் அப்படி நடக்காது. அப்படி இல்லாமல் மூன்றாக பிரிந்து பா.ஜ.க ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் அணி தி.மு.க கூட்டணி, சசிகலா டீம் தனியாக நின்றால் என்றால் அந்த வாக்குகள் பிரிவதில் தி.மு.கவுக்கு லாபம் கிடைக்கும்.”
 
அப்படியானால் தி.மு.க வெல்லும் என்கிறீர்களா?
அதிக சீட்டுகள் கிடைக்கும். பா.ஜ.க சசிகலாவுடன் இல்லாவிட்டால் தி.மு.க அதிக இடங்களை வெல்லும். ஆனால், பா.ஜ.க தனியாக நின்றால் கொஞ்சம் வாக்குகள் கிடைக்கும். அடுத்தடுத்த தேர்தலில் வெல்லலாம்.”
 
அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி அமையாவிட்டால் தேசிய அளவிலான கூட்டணி அமையுமா?
“தேசிய அளவில் எப்படி கூட்டணி அமையும்?. அவர்கள் திராவிட கட்சிகள், நாங்கள் இந்துத்வவாதி அது எப்படி அமையும். இப்போது தமிழ்நாட்டில் உள்ள பா.ஜ.க-வினர் விருந்தினர் மாளிகை (ஹாஸ்பிடாலிட்டி சென்டர்) மாதிரி உள்ளது. நான் கட்சியையும் விட்டுக்கொடுக்க முடியாது.”
 
நீங்கள் கூட்டணி பற்றி இங்குள்ள கட்சி மேலிடத்தில் பேசினீர்களா?
“நான் எதற்கு பேசணும். என்னிடம் பேசினால் நான் பேசுவேன். நான் எதற்காக வலிய போய் பேச வேண்டும்.”
 
நீங்கள் மூத்த தலைவர் அல்லவா?
“அது சரி, ஆனால் அதற்கு அர்த்தம் எல்லாவற்றிலும் நானே போய் கேட்கணும் என்பதல்ல. இதுவரை அவர்கள் என்னிடம் எதுவும் பேசியதில்லை. இந்த 5 ஆண்டுகளில் ஒரு நாளும் அவர்களிடம் நான் பேசியதில்லை.
 
என்னுடைய அரசியல் ராமர் கோவில் கட்டுவது, ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுப்பது. இந்தியா முழுவதும் தேசப்பக்தியை வளர்க்க நான் நாடு நாடாக முழுவதும் சுற்றி இருக்கிறேன். தமிழ்நாட்டுக்காக விசேஷமாக எதுவும் அக்கறை இப்போதைக்கு இல்லை.” என்றார் சுப்பிரமணியன் சுவாமி .