நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசிய பேச்சுக்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினார் பாஜகவின் பொது செயலாளர் ஹெச். ராஜா.
எச்.ராஜாவின் வழக்கு இன்று காலை 11 மணிக்குத்தான் விசாரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதிசயமாக எச்.ராஜா வேகமாக வந்து 9 மணிக்கே நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டார். மிகவும் குறைந்த அளவிலான பாஜகவினரே அவருடன் வந்திருந்தனர். முக்கிய பிரமுகர்கள் யாரும் வரவில்லை.
9 மணிக்கே வந்தவர் 2 மணி நேரம் காத்திருந்துள்ளார். அப்போது வக்கீல்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் இருக்கையில் சென்று அமர்ந்துள்ளார். விசாரணைக்காக வந்திருக்கும் ஒரு நபர், அதுவும் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்கும் ஒரு நபர் இப்படி நேரடியாக வந்து வக்கீல்கள் இருக்கையில் அமர்ந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதைப்பார்த்த அங்கிருந்த வக்கீல்கள் உடனே கோபத்திற்கு உள்ளானார்கள். வேகமாக சென்று எச்.ராஜாவுடன் வாக்குவாதம் செய்தனர். 5 நிமிடம் வரை இந்த வாக்குவாதம் நடந்தது. இதையடுத்து வக்கீல்கள் பலர் அங்கு கூடியதால் எச்.ராஜா மன்னிப்பு கேட்டு கொண்டு அந்த இடத்தை விட்டு எழுந்து, வேறு இடத்தில் சென்று சோகத்துடன் அமர்ந்தார்.
பின்னர் நீதிபதி வந்தவுடன் கையை கட்டி பவ்யமாக எழுந்து நின்று வேளையில் அவர் சார்பாக மனு எழுத்து பூர்வமாக அளிக்கப்பட்டது
அதில் கோபம் மற்றும் உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டதாகவும், பிறகு அது தவறு என்று வருந்தியதாகவும், நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் ஹெச்.ராஜா நீதிமன்றத்தில் கேட்டு கொண்டார்.
கெஞ்சி கைகூப்பி கேட்டு கொண்டதால் இதை அடுத்த இனி மேல இப்படி பேச கூடாது என்ற கண்டிப்புடன் அவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்துவைக்கப்பட்டது. முன்னதாக திருமயத்தில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் ஹெச். ராஜா பேசியிருந்தார்.
சர்ச்சை பேச்சு வீடியோ வெளியான மறுநாள் தான் பேசவில்லை எனவும், வீடியோ எடிட் செய்யப்பட்டது எனவும் எச்.ராஜா கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக இன்று நேரில் ஆஜரான ஹெச். ராஜா, கோபம் மற்றும் உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டதாகவும், பிறகு அது தவறு என்று வருந்தியதாகவும் கூறியதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், அவமதிப்பு வழக்கை முடித்துவைத்தது.
அகில இந்தியா பாஜக பொது செயலாளர் இப்படி கூனி கூறுகி நீதிமன்றத்திடம் மன்னிப்பு கேட்டது பாஜக கட்சிக்கு பெரும் பின்னடைவு என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் .. இனி மேலயாவது அவருக்கு வாயடக்கம் வந்தால் அது அவருக்கும் அவர் சார்ந்த அகில இந்திய கட்சிக்கும் அது நல்லது என்று அவர்கள் மேலும் கருத்து தெரிவித்தனர் .