சேலம் மாவட்டம் நாழிக்கல்பட்டி மன்னார்காடு கிராமத்தை சேர்ந்தவர் லெட்சுமணன் (வயது 37). கல் உடைக்கும் தொழிலாளி. இவரது மனைவி ஜெயா (26), இவர்களுக்கு சுமித்ராஸ்ரீ (7), ஷாலினி (3), வெற்றிவேல் என்ற 11 மாத குழந்தையும் இருந்தது.
கடந்த 26-ந்தேதி வீட்டில் இருந்த ஜெயா மற்றும் அவரது 3 குழந்தைகளும் மாயமானது இது குறித்து லெட்சுமணன் மல்லூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்று கொழிஞ்சம்பட்டி மெயின்ரோட்டில் உள்ள ஒரு கிணற்றில் ஜெயா மற்றும் அவரது 3 குழந்தைகளும் பிணமாக கிடந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் செவ்வாய்ப்பேட்டை போலீசார் 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஜெயா மற்றும் அவரது குழந்தைகள் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
தாய் மற்றும் மூன்று குழந்த்தைகள் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது இரு விதமான தகவல்கள் வெளியானது.
கடந்த சில மாதங்களாக ஜெயா செல்போனில் பல மணி நேரம் வாலிபர் ஒருவரிடம் பேசி வந்ததாகவும் இதனை அறிந்த லெட்சுமணன் கண்டித்தால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் ஆனாலும் ஜெயா விடிய விடிய அந்த வாலிபரிடம் பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் லெட்சுமணன் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஜெயாவிடம் இருந்த செல்போனை பிடுங்கி மறைத்து வைத்தார்.இதனால் மனவேதனை அடைந்த ஜெயா அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் சென்று இரவு நேரங்களில் செல்போனை கேட்டார். ஆனால் அவர்கள் ஏற்கனவே லெட்சுமணன் செல்போனை பிடுங்கி வைத்ததை அறிந்து கொடுக்க மறுத்தனர் என்றும் .,
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஜெயா குழந்தைகளுடன் தற்கொலை செய்ய முடிவு செய்தாகவும் . அதன்படி கடந்த 26-ந் தேதி காலை வீட்டில் இருந்து குழந்தைகளை அழைத்து சென்ற ஜெயா குழந்தைகளை முதலில் கிணற்றில் தள்ளியும், பின்னர் தானும் கிணற்றில் குதித்தும் தற்கொலை செய்தது தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து ஜெயா அடிக்கடி பேசிய அந்த வாலிபர் யார் என்பது குறித்து அவரது செல்போனுக்கு வந்த அழைப்புகளை வைத்து மல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர்
ஆனால் இது முற்றிலும் தவறு என்றும் ஜெயாவுக்கு முகத்தில் தாக்கிய வெள்ளை நோய் சமீப காலமாக அவரது உடல் முழுவதும் பரவியதாகவும், இதனால் மனம் உடைந்த ஜெயா குழந்தைகளை கொன்று தற்கொலை செய்ததாகவும் ஜெயாவின் உறவினர்கள் தெரிவித்தனர்.
யார் உண்மை சொல்கிறார்கள் போலிசாரா அல்லது ஜெயாவின் உறவினர்களா என்பதே இந்த வழக்கின் முக்கிய கேள்வி ..