இந்தோனேசியாவின் சும்பா தீவில் இன்று அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 6.4 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
 
இந்தோனேசியாவின் போகரவாட்டுவுக்கு தென்மேற்கு பகுதியில் இருக்கும் சும்பா கடல் பகுதியில் இன்று அதிகாலை 5.29 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
 
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தை சும்பாவின் வெயின்கபு நகரத்தில் வசிக்கும் மக்கள் உணர்ந்துள்ளனர்.
 
நிலநடுக்கத்தால் கட்டிடங்கள், வீடுகள் அதிர்ந்தன. பீதி அடைந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த முதற்கட்ட தகவல்கள் ஏதும் இல்லை.
 
கடந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி இந்தோனேசியாவின் ஜாவா, சுமத்ரா தீவுகளில் எரிமலை வெடித்ததை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் 430 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.