இந்திய ராணுவத்தில் பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் பட்டதாரி இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்திய ராணுவத்தில் 130-வது தொழில்நுட்ப பட்டதாரிகள் நுழைவுத் திட்டத்தில் சேர்பவர்கள் குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் அளிக்கப்படும். இந்த பணி 18 நிலை வரை பதவி உயர்வும், ஊதிய உயர்வும் அளிக்கக்கூடிய ஒரு பணியாகும்.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 40
Civil – 10
Architecture – 01
Mechanical – 06
Electrical / Electrical & Electronics – 06
Computer Sc & Engg / Computer Technology/ Info Tech/ M. Sc Computer Sc – 08
Electronics & Telecom/ Telecommunication/ Electronics & Comn/ Satellite Communication – 05
Electronics – 01
Metallurgical – 01
Electronics & Instrumentation/ Instrumentation – 01
Micro Electronics and Microwave – 01
வயது வரம்பு: 01.01.2020 தேதியின்படி விண்ணப்பதாரர்கள் 20 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் மேற்கண்ட பிரிவுகளில் பி.இ அல்லது பி.டெக், எம்.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எஸ்எஸ்பி நடத்தும் நேர்முகத் தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு டேராடூன் ராணுவ அகாடமியில் ஒராண்டு பயிற்சி அளிக்கப்படும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.05.2019
விண்ணப்பிக்கும் முறை: JOIN INDIAN ARMY என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.