இந்திய வான் எல்லையில் பாகிஸ்தான் போர் விமானங்கள் நுழைந்து பிப்ரவரி 27ம் தேதியை ஆண்டுதோறும் கொண்டாடப் போவதாக அந்நாட்டு விமானப்படை தளபதி அறிவித்துள்ளார்.
காஷ்மீரின் புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம் மீது இந்திய விமானப்படை குண்டுவீசி தாக்குதல் நடத்தியது.
இதற்கு பதிலடியாக கடந்த பிப்ரவரி 27ம் தேதி பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்து ராணுவ முகாம்களை தாக்க முயன்றன.
அப்போது, , இந்திய விமானி அபிநந்தன், பாகிஸ்தானின் எப்16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக இந்திய தரப்பு தெரிவித்த நிலையில் அதை பாகிஸ்தானும் அமெரிக்கவும் மறுத்தன .
ஆனால் அவரது விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், பாராசூட் மூலம் பாகிஸ்தான் எல்லைக்குள் அபிநந்தன் தரை இறங்கினார்.
அவரை கைது செய்த பாகிஸ்தான் ராணுவம், சர்வதேச நாடுகளின் கோரிக்கையை ஏற்று தன்னிச்சியாக விடுதலை செய்தது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை இதனால் இந்தியர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் பாராட்டினார்
இந்நிலையில், பாகிஸ்தான் விமானப்படையின் ஆய்வு கூட்டம் இஸ்லாமாபாத்தில் நேற்று நடந்தது. இதில், விமானப்படை தளபதி முஜாகித் அன்வர் கான் பேசுகையில், ‘‘கடந்த பிப்ரவரி 27ம் தேதி எதிரியின் அத்துமீறலுக்கு எதிராக பாகிஸ்தான் விமானப்படையின் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தான் வரலாற்றில் இனி இது, ‘உடனடி பதிலடி ஆபரேஷன்’ என ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூறப்படும். இந்த பதிலடி தாக்குதலானது, எதிரிகளின் அத்துமீறிய தாக்குதலை தவிடுபொடியாக்கும் தகுதியும் திறமையும் நமக்குள்ளது என்பதை பறைசாற்றும் வகையில் அமைந்திருக்கிறது ,’’ என்றார்.
பாலகோட் தாக்குதலில் யாரும் சுடப்படவில்லை என இந்திய வெளியுறு மந்திரி சுஸ்மா ச்வார தெர்வித்த நிலையில் இதனை இந்திய விமானப்படை பெரிதாக கொண்டாட இயலாமல் போனது ஆனால் பாகிஸ்தான் தனது செயலை ஆண்டுதோறும் கொண்டாடப் போவதாக அறிவித்து இருப்பது இந்தியாவின் பாஜக அரசின் மோடிக்கு பெரும் பினனடைவாக கருதப்படுகிறது