இந்தியாவின் முதல் பசு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜஸ்தானில் சுயேட்சையிடம் படுதோல்வி அடைந்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜனதா கட்சி தோல்வியை தழுவியது. காங்கிரஸ் கூட்டணி பெருனபன்மை இடங்களில் வெற்றிப்பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
வசுந்தரா ராஜேவின் மந்திரி சபையில் இடம் பெற்று இருந்த 19 மந்திரிகள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். அவர்களில் 13 மந்திரிகள் பரிதாபமாக தோல்வியை தழுவினார்கள்.
ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சியில் பசு பாதுகாப்பு மிகவும் முக்கியத்துவம் பெற்றது. ராஜஸ்தானில் மாட்டிறைச்சிக்குத் தடை உள்ளது.
மாட்டிறைச்சி வைத்திருப்பவர்களை பசு காவலர்கள் தாக்குவது வாடிக்கையாகவே இருந்தது. பசு பாதுகாப்பு என்ற பெயரில் குண்டர்கள் நடத்திய கும்பல் தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் அடித்தே கொல்லப்பட ., அதிர்ந்த சுப்ரீம் கோர்ட்டும் கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்தியாவின் முதல்முறையாக ராஜஸ்தானில் பசு பாதுகாப்புத்துறைக்கு மந்திரி நியமிக்கப்பட்டார். பசுக்களைக் காக்க தனி அமைச்சகமே உருவாக்கப்பட்டது. இத்துறைக்கு ஒட்டாரம் தேவாசி மந்திரியாக நியமனம் செய்யப்பட்டார். ராஜஸ்தான் தேர்தலில் ஒட்டாரம் சிரோகி என்ற தொகுதியில் போட்டியிட்டார்
இந்தியாவிலேயே முதல் முறையாக பசு பாதுகாப்புக்கு என தனி இலாகா ஒதுக்கப்பட்டு அதற்கு மந்திரியாக நியமிக்கப்பட்டவர் ஒட்டாரம் தேவாசி என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தானில் பசு பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்துவந்த ஓட்ராம் தேவசி சுயேச்சை வேட்பாளரிடம் பரிதாபமாகத் தோற்றுப்போனார். .
பசு பாதுகாப்புத்துறை மந்திரியான ஒட்டாரம் தேவாசி தன்னை எதிர்த்து போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். சுமார் 10 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் அவர் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டார்.