இந்தியாவில் எண்ணெய் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்களில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் எனப்படும் ஐ.ஓ.சி.எல்., முக்கிய நிறுவனம். இதில் டெக்னிக்கல் மற்றும் நான்-டெக்னிக்கல் பிரிவுகளில் காலியாக உள்ள பணி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
மார்க்கெட்டிங் பிரிவிலான மேற்கண்ட தென் மண்டலத்தைச் சார்ந்த காலியிடங்கள் தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
பணி மற்றும் காலியிடங்கள்: Technical & Non technical trade and technician apprentices – 354
கல்வித்தகுதி: சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெகானிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஸன் உள்ளிட்ட எதாவது துறையில் ஐடிஐ / டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 31.08.2018 தேதிப்படி 18 – 24 வயதுக்குள் இருக்க வேண்டும். சில பிரிவினருக்கு உச்சபட்டச வயது வரம்பில் தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்ச்சி முறை: மேற்கண்ட பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மூலமாக நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 21. 09. 2018 @ 5pm
விண்ணப்பிக்கும் முறை: Indian Oil என்ற வலைதளத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.