காவல் உதவி ஆய்வாளரை அதிமுக கட்சியை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுனன் எட்டி உதைத்து மோதலில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே பொது போக்குவரத்து தற்போது தடை செய்யப்பட்டுள்ளது.. இதனால், சேலம் மாவட்டத்தில் 27 இடங்களில் போலீசார் தடுப்புகள் அமைத்து தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் அதிமுக கட்சியை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.அர்ஜுனன் (TN 30 AA 5859) வாகனத்தில் சுங்கச்சாவடி வந்தபோது காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அதில் ஆவேசமடைந்த கே.அர்ஜுனன் காவலர்களை ஏகவசனத்தில் தரக்குறைவாக பேசினார். உதவி ஆய்வாளரும் அவரை ஒருமையில் திட்டினார்.
[su_youtube url=”https://www.youtube.com/watch?v=R1YdIA7qG54″ width=”700″ autoplay=”yes” title=”அதிமுக Ex- எம்பி அர்ச்சுணன் கவாவலரை ஆபாசமாக பேசி எட்டி உதைத்தார்..”]
இதனால் கோபப்பட்ட கே.அர்ஜுனன் அங்கிருந்த காவல் உதவி ஆய்வாளரை காரை விட்டு இறங்கி வந்து தாக்க முயன்றார். பதிலுக்கு காவல் உதவி ஆய்வாளர் கே.அர்ஜுனனை தள்ளிவிட்டார். பின்னர் ஆத்திரமடைந்த அவர் காவல் உதவி ஆய்வாளரை எட்டி உதைத்தார். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி கொண்டுள்ளது.
கே.அர்ஜுனன் 80 – 84 ஆம் ஆண்டுகளில் தர்மபுரி திமுக எம்பியாக பதவி வகித்தார். பிறகு அதிமுகவில் சேர்ந்து சேலம் மாவட்டச் செயலாளர், வீரபாண்டி எம்எல்ஏ., உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்தார். தற்போது ஜெ.தீபா ஆதரவாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க: அது லாக்அப் மரணம் இல்லையாம்; சொல்கிறார் அதிமுக அமைச்சர்
இந்நிலையில் சாத்தான்குளம் சம்பவத்தில் காவல் துறையினருக்கு எதிராக பொது மக்கள் அனைவரும் கண்டனங்கள் தெரிவித்தனர். ஆனால், தற்போது ஆளும் கட்சியினரின் இந்த காவல் துறையினர் மீதான தாக்குதலுக்கு மக்கள் எந்த ஆதரவும் தெரிவிக்காதது வருத்தமளிப்பதாக பெயர் குறிப்பிட விரும்பாத காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியது குறிப்பிடத்தக்கது.