கூகுள் நிறுவனம் தனது கைபேசி இயங்குதளமான ஆண்ட்ராய்டின் புதிய பதிப்பான ‘ஆண்ட்ராய்டு 9 பை’யை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கு முந்தைய பதிப்புகளுக்கு ஆல்பா, பீட்டா, கப்கேக், டோனட், எக்லைர், ஃரோயோ, ஜிஞ்சர்பிரட், ஹனி கோம்ப், ஐஸ்கிரீம் சாண்ட்விச், ஜெல்லி பீன், கிட்கேட், லாலிபாப், மார்ஸ்மலோவ், நக்கெட், ஓரியோ போன்ற பெயர்களில் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் புதிய சிறப்பம்சங்களோடு கூடிய பதிப்புகளை வெளியிட்டு வரும் கூகுள் நிறுவனம், கடந்த ஆறாம் தேதி ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் 9வது பதிப்பை ‘பை’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது.
பயனர்களின் கைபேசி செயல்பாட்டை எளிமையாகவும், வேகமாகவும், திறன்வாய்ந்ததாகவும் மாற்றும் வகையில் செயற்கை நுண்ணறிவுத் திறனை அடிப்படையாக கொண்டு ஆண்ட்ராய்டின் இந்த பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது” என்று கூகுள் நிறுவனம் கூறுகிறது.