மதுக்கடைகளை மூடுவது தொடர்பான வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
 
இந்த வழக்கு விசாரணை முடிவில், மகாத்மா காந்தி ஆர்எஸ்எஸ் தீவிரவாதி வினாயக் கோட்சேயால் சுட்டுக் கொல்லப்பட்ட நாளான 30-ந் தேதி (அதாவது இன்று) மது விலக்கு நாளாக அறிவித்து, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். அதுமட்டுமின்றி டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்கள், ஓட்டல்கள், மனமகிழ் மன்றங்களிலும் அன்றைய தினம் மது விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்படுகிறது.
 
இதுதொடர்பான அறிக்கையை 31-ந் தேதி (நாளை) அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.