‘மனித கம்ப்யூட்டர்’ என அனைவராலும் போற்றப்பட்ட சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் திரைத்துறை மட்டுமன்றி பல்வேறு மொழிகளிலும், மறைந்த சினிமா நட்சத்திரங்கள் உட்பட, பல்வேறு துறைகளிலும், சமூக பணிகளிலும் சிறப்பாக ஈடுபட்டு வந்தவர்களின் வாழ்க்கை வரலாறும் தற்போது திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தை சார்ந்த மறைந்த சகுந்தலா தேவி, கணிதத்தில் திறமைசாலியாக இருந்தவர் . இவர் வேகமாகப் செயல்படும் கம்ப்யூட்டர்களை விட கணக்குளை சரியாக சொல்லக்கூடியவர். கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற இவரை அனைவரும் மனித கம்ப்யூட்டர் என்றே அழைத்து வந்தனர்.

இந்நிலையில் மறைந்த சகுந்தலா தேவியின் வாழ்க்கையும் படமாகிறது. இப்படம் இந்தியில் இயக்குனர் அனு மேனன் இயக்கத்தில் உருவாகிறது. மறைந்த மனித கம்ப்யூட்டர் சகுந்தலா தேவி கேரக்டரில் பாலிவுட் நடிகை வித்யாபாலன் நடிக்கிறார். இவருடன் நடிகை சான்யா மல்கோத்ராவும் நடிக்கிறார்.

நடிகை சான்யா மல்கோத்ரா, வித்யாபாலனின் மகளாக, அதாவது சகுந்தலாதேவியின் சொந்த மகள் அனுபமா பானர்ஜி கேரக்டரில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.