அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்து உள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் இன்று தனது முதல்கட்ட தேர்தல் பிசாரத்தை தொடங்கி உள்ளார் முதல்வர் பழனிசாமி. அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது, தைப் பொங்கலை முன்னிட்டு அரிசி பெறும் குடும்ப அட்டை வைத்திருக்கும் 2.6 கோடி அட்டைதாரர்களுக்கு தலா 2,500 ரூபாய் வழங்கப்படும்.
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2,500 மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் பொங்கல் பரிசாக அரிசி குடும்ப அட்டைகளுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வந்த நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, இந்தாண்டு ரூ.2,500 வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கப்பட்டு, பொங்கல் பரிசுத்தொகுப்பு ஜனவரி 4ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவித்து உள்ளார்.
மத்திய அரசு பேச்சுவார்த்தை என்ற பெயரில் நாடகம் நடத்துகிறது; மு.க.ஸ்டாலின் தாக்கு