பிரான்சிடமிருந்து ரபேல் போர் விமானங்களை வாங்க, கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 126 விமானங்களை வாங்க பேரம் பேசப்பட்டு வந்த நிலையில், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
 
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, ரபேல் ஒப்பந்த பேச்சுவார்த்தையை துரிதப்படுத்தியது. பிரதமர் மோடி கடந்த 2016, செப்டம்பரில் தனது பிரான்ஸ் பயணத்தின் போது, இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். பறக்கும் நிலையில் 36 விமானங்களை வாங்க இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்து கொண்டன.
 
இதில், இந்தியாவின் பங்கு நிறுவனமாக அனில் அம்பானியின் நிறுவனம் சேர்க்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் ரூ.1.30 லட்சம் கோடி ஊழல் நடந்திருப்பதாகவும் பொதுத்துறை நிறுவனமான எச்ஏஎல், உள்நோக்கத்துடன் புறக்கணிக்கப் பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.
 
காங்கிரஸ் ஆட்சியில் ஒரு விமானம் ரூ.526 கோடிக்கு விலை பேசப்பட்ட நிலையில், பாஜ ஆட்சியில் ஒரு விமானம் ரூ.1,640 கோடிக்கு விலை பேசப்பட்டதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு வைக்கிறது. இதனால் பல கோடி நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
 
இந்த ஒப்பந்தத்தில் விமானத்தின் விலையை அரசு ரகசியமாக வைத்திருப்பது மேலும் சந்தேகத்தை வலுக்கச் செய்துள்ளது. அரசியல் களத்தில், பாஜ அரசு மீது சுமத்தப்பட்டுள்ள மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டாக இது அமைந்துள்ளது.
 
ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசியதாவது,’இந்தியா கேட்ட சிறப்பு வசதிகளுக்கான கட்டண நிர்ணயத்தில் தான் ஊழலே நடந்துள்ளது; ரபேல் விவகாரத்தில் மத்திய அரசு கூறிய அனைத்தும் பொய் என்பது நிரூபணம் ஆகியுள்ளது.
 
இந்தியா கோரிய சிறப்பு வசதிகளுக்கான கூடுதல் தொகை 126 விமானங்களுக்கு 14,000 மில்லியன் யூரோ ஆகும்.’ என்று கூறினார்.
 
மேலும் ரஃபேல் ஒப்பந்தத்துக்கு எதிராக பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளின் கடிதங்களை ராகுல்காந்தி வெளியிட்டார். இதன் ஆதாரத்தில் அடிப்படையில் ரஃபேல் விவகாரத்தில் மத்திய அரசு கூறிய பொய் என்பது நிரூபணம் ஆகியுள்ளது என்றும் .
 
2007-ல் டசால்ட் நிறுவனம் செயல்பாட்டு உத்தரவாதத்தை அளித்திருந்தது.ஆனால் இந்த முறை அரசு உத்தரவாதம், வங்கி உத்தரவாதம் மற்றும் செயல்பாடு உத்தரவாதம் பெறப்படவில்லை என்றும்.,
 
அனில் அம்பானிக்காக மட்டுமே ரஃபேல் ஒப்பந்தத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.