தீவிர அரசியலில் குதித்திருக்கும் பிரியங்கா காந்தி, உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதி காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
 
இதையடுத்து, உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தலைவர்கள், அடிமட்டத் தொண்டர்கள் வரை அனைவரையும் சந்தித்து தேர்தல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்துகிறார் பிரியங்கா காந்தி.
 
இன்று காலை முதல் ஒவ்வொரு குழுவாக சந்தித்து ஆலோசனை நடத்திய பிரியங்கா காந்தி, 2 மணிக்கு மேல் நாடாளுமன்ற தொகுதி வாரியாக தலைவர்களை சந்தித்துப் பேசுகிறார்.
 
இந்த நிலையில், கட்சித் தொண்டர்களிடம் ஒரு விண்ணப்பப்படிவம் கொடுக்கப்பட்டு அதை பூர்த்தி செய்து தருமாறு காங்கிரஸ் கட்சி கேட்டுள்ளது.
 
அந்த விண்ணப்பத்தில், ஒவ்வொரு தொண்டரும் தன்னைப் பற்றிய விவரங்களை அளிக்கும் வகையில் 10 கேள்விகள் இடம்பெற்றுள்ளன. அதில்,
 
டிவிட்டர் உட்பட சமூக வலைத்தளங்களில் இணைந்துள்ளீர்களா?
உங்கள் ஜாதி, இனம் போன்றவை பற்றிய கேள்விகளும் இடம்பெற்றுள்ளது. 
மேலும், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற செய்ய வேண்டிய தேர்தல் வியூகம் என்ன என்பது குறித்தும் கேட்கப்பட்டுள்து.
அது மட்டுமல்ல, ஒரு தொண்டர், எத்தனை காலமாக காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார் என்பது குறித்தும் விண்ணப்பத்தில் கேள்வி இடம்பெற்றுள்ளது.
அதாவது, எவ்வளவு காலமாக நீங்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளீர்கள்
கட்சியில் இதுவரை ஏதேனும் பதவியை வகித்திருக்கிறீர்களா? காங்கிரஸ் கட்சி சார்பில் ஏதேனும் தேர்தலில் போட்டியிட்டு இருக்கிறீர்களா? என்பது போன்ற கேள்விகளும் உள்ளன.
உங்களது வாக்குச்சாவடி எது? உங்கள் கிராம சபைத் தொகுதியில் எத்தனை வாக்காளர்கள் உள்ளனர்?
உங்கள் சட்டப்பேரவைத் தொகுதியில் எத்தனை கிராம சபைகள் உள்ளன? உங்கள் தொகுதியில் கடந்த 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் எத்தனை வாக்குகள் பெற்றன என்ற கேள்விகளும் இடம்பெற்றுள்ளது.
 
பிரியாங்காவின் இந்த நூதன முயற்சி பலரையும் மகிழ்ச்சி மற்றும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது என உட்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கினறன