நாளை நடைபெற உள்ள லோக் ஆயுக்தா தேர்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்க முடியாது என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
 
லோக் ஆயுக்தா தலைவர், உறுப்பினர்களை தேர்வு செய்யும் கூட்டத்திற்கு எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு கடிதம் அனுப்பப்பட்டது.
 
இதற்கு பதில் கடிதத்தை ஸ்டாலின் அரசுக்கு அனுப்பியுள்ளார். அக்கடித்தில் லோக் ஆயுக்தா தேர்வுக்குழு கூட்டத்தில் திமுக பங்கேற்காது என கூறியுள்ளார்.
 
லோக் ஆயுக்தாவின் தலைவர், உறுப்பினர்களை தேர்வு செய்யும் தலைவரான முதல்வர் மீதே ஊழல் புகார் உள்ளது என்றும்..
மேலும் லோக் ஆயுக்தா தலைவர், உறுப்பினர்களை நியமிக்கும் குழுவில் ஆளும்கட்சியினரே அதிகம் உள்ளனர் என்றும்…
 
இது போக ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் சபாநாயகரும் இந்த குழுவில் உள்ளார் என்றும் ..
 
இந்த தேர்வு குழு உயர்நீமன்ற நீதிபதி தலைவராக இடம்பெறும் 5 உறுப்பினர்களை கொண்டதாகவும் இல்லை. எனவே இந்த தேர்வு கூட்டத்தில் பங்கேற்பது ஊழலை ஒழிக்க எந்த வகையிலும் உதவாது என குறிப்பிட்டுள்ளார்.
 
வெளிப்படையான விசாரணைக்கு வித்திடாமல் லோக் ஆயுக்தா அமைப்பு உள்ளதாகவும், அதிகாரமற்ற லோக் ஆயுக்தா அமைப்பதால் தேர்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்க முடியாது என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
 
லோக் ஆயுக்தா அமைப்பு அதிகாரமற்ற நிலையில் உள்ளதால் ஊழல் புகாரை விசாரிக்க துணை செயலர் தலைமையில் விசாரணை குழு அமைப்பது என்பது வெறும் கண்துடைப்பாகவே இருக்கும் என கடித்தில் ஸ்டாலின் சாடியுள்ளார்.