ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் பெயரில் போலியான லிங்க் சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது.

அளவு கடந்த ஆபர்களை கொடுப்பதாக கூறும் அந்த போலி லிங்க் மூலம் நமது சொந்த தகவல்கள் திருடப்படுகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. 99% விற்பனையில் அமேசான் பிக் பில்லியன் சேல்ஸ் ஆபர் என வலம் வரும் இந்த லிங்கை பதிவு செய்ததும் ரூ.10க்கு மிக்சியும், ரூ.90க்கு மெகா ஸ்பீக்கர் என மிகவும் மலிவான விலைக்கு பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.

அவற்றில் ஏதேனும் ஒரு பொருளை வாங்கினால் நமது பெயர், வீட்டு முகவரி என அனைத்து தகவல்களையும் கேட்கிறது. பின்னர் அந்த முகவரிக்கு டெலிவரி செய்யும் ஆப்ஷனை டச் செய்து, பின்னர் பிளேஸ் ஆடரை கிளிக் செய்ய வேண்டும். அவ்வாறு கொடுக்கும் பொழுது 10 நண்பர்களுக்கு இந்த லிங்கை அனுப்பும் ஆப்ஷன் வருகிறது.

ஒரு வேலை இன்வைட் பிரண்ட்ஸ்  ஆப்ஷனை டச் செய்யாமல், கன்பாம் ஆடராய் டச் செய்தால் 10 பேருக்கு அனுப்பியே ஆக வேண்டும் என்ற ஆப்ஷன் வந்து கொண்டே இருக்கிறது.

இதனால் இன்வைட் பிரண்ட்ஸ் ஆப்ஷனை தேர்வு செய்த பிறகு தான் பொருட்களை வாங்க முடிகிறது. ஆடரை டச் செய்ததும் பொருளை வாங்கியதற்கான விவரங்களை தங்களது மின்ஜல் முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என கூறி ஆடர் எண்ணும் அனுப்பப்படுகிறது.

ஆனால் அமேசானிடம் இருந்து எந்த வித தகவல்களும் மின்னஞ்சலில் அனுப்பப்படுவதில்லை. இது குறித்து அமேசான் நிறுவனத்திடம் விவரம் கேட்ட பொழுது, அந்நிறுவனத்தினர் அந்த லிங்க் தங்களுடையது இல்லை என தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் இது போன்ற லிங்குகளை தவிர்க்க வேண்டும் எனவும் அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.