தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் ஆபிரஹாம் சாமுவேலுக்கு இந்தி மொழி தெரியவில்லை என்ற காரணத்தினால் மும்பை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரியால் அவமதிக்கப்பட்டார்.
 
பின்னர் ஆபிரஹாம் சாமுவேல் அந்த இடத்திலேயே ‘தாம் அவமானப்படுத்தப்பட்டதாக டுவிட் செய்து பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தி.மு.க தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோரை டேக் செய்திருந்தார்.
 
இச்சம்பவம் தொடர்பாக மும்பை சிறப்பு பிரிவு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே ஆப்ரகாம் சாமுவேல் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டது, சம்பந்தப்பட்ட அதிகாரி தற்காலிகமாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
 
ஹிந்தி ஆட்சி மொழியாக இல்லாததும் தமிழை போல அதுவும் ஒரு பிராந்திய மொழி மட்டுமே எனவும் என்று பலரும் கூறி  சாமுவேலுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு குவிந்து வருகிறது. குறிப்பாக அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் அவருக்கு ஆதரவான கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
 
 அந்த வகையில் மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர் கனிமொழி டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்தப்பதிவில், “நான் இந்தியன். எனக்கும் இந்தி பேச தெரியாது” என்று பதிவிட்டுள்ளார். அதோடு ஆபிரஹாம் சாமுவேல் விமான நிலையத்தில் அவமானப்படுத்தப்பட்ட செய்தியையும் கனிமொழி பகிர்ந்துள்ளார்.