இருமொழி கொள்கைக்கு எதிரான முடிவுகளை திமுக கடுமையாக எதிர்க்கும் என்று அண்ணா அறி்வாலயத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கலைஞரின் 96-வது பிறந்த நாள் ஜீன் 3 அன்று கொண்டாடப்பட்டது .
 
இதனையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்றத்திற்கு தேர்வாகியுள்ள எம்.பி.க்கள், மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.
 
இந்த கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அவையே பின்வருமாறு:
 
மும்மொழி திட்டம் என்று தமிழர்களை உரசி பார்க்காதீர்கள் என்றும், இரு மொழி கொள்கைக்கு எதிரான முடிவுகளை திமுக கடுமையாக எதிர்க்கும் என்று தீர்மானம் நிறைவேற்றம்
 
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்ப பெறவும், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கவேண்டும்
 
குடிநீர் பஞ்சத்தை போக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் தேவை
 
அனைத்து திமுக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கருணாநிதியின் பிரதியாக செயல்பட வேண்டும்
 
திமுக எம்.பிக்கள் நாடாளுமன்றத்திலும், தொகுதியிலும் சிறப்பாக செயலாற்றி மக்களிடம் நற்பெயர் வாங்க வேண்டும்
 
நாடாளுமன்றத்தில் திமுக மூன்றாவது தனிப்பெரும் கட்சியாக நிற்பதை எண்ணி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பெருமிதம் கொள்கிறது
 
அனைத்து தரப்பு வாக்காளர்களின் குறைகளுக்கும் உடனுக்குடன் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள தீர்வு காண வேண்டும்
 
என தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டன ..
 
முன்னதாக கலைஞரின் பிறந்தநாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
 
அவருடன் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.