தூத்துக்குடி சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழப்பு லாக் அப் மரணம் இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இரட்டைக் கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தப் படுகொலையைக் கண்டித்தும், பாதிக்கப்பட்டோருக்கு நீதி கோரியும் எதிர்க்கட்சிகள், பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. மாநில மனித உரிமை ஆணையமும் இவ்விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் போட்டியளித்த தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, “சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் உயிரிழப்பு லாக் அப் மரணம் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் வாசிக்க: பால் விற்பனையாளர்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த போலீஸ்.. நடந்தது என்ன?
காவல்நிலையத்தில் தாக்கப்பட்டு உயிரிழந்தால் மட்டுமே ‘லாக் அப் டெத்’ என்று சொல்ல முடியும். ஆனால் தற்போது நடந்த சம்பவம் காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டு, அங்கிருந்து மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு, கிளைச்சிறையில் அடைக்கப்பட்டு 2, 3 நாட்களுக்குப் பின்னர் நடந்துள்ளது. இதை லாக்கப் மரணம் எனச் சொல்ல முடியாது என விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் நீதிமன்றத்தின் அறுவுறுத்தலின் படி இருவரின் உடற் கூறாய்வு நடைபெற்றதது. முதலில் காவ்துறையினர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டாலும், மக்களின் உணர்வுகளை மதித்து பணியிடை நீக்கம் செய்து முதல்வர் உத்தரவிட்டார். நீதிமன்றம் என்ன வழிமுறை சொல்கிறதே, என்ன தீர்ப்பு சொல்கிறதோ உடனடியாக நடவடிக்கை எடுக்க அரசு தயராக உள்ளது” என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
[su_youtube url=”https://www.youtube.com/watch?v=US1crFmn_Rk” width=”700″ autoplay=”yes” title=”சாத்தான்குளம் போலீஸ் காவலில் பென்னிக்ஸ்- ஜெயராஜ் இரட்டைக் கொலை”]