ஜெயலலிதா மரணம் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் சி.வி.சண்முகம்
 
ஜெயலலிதா மரணம் குறித்து முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை கைது விசாரிக்க வேண்டும் என அமைச்சர் சி.வி.சண்முகம் கூறி உள்ளார்.
நேற்று சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய விவரம் வருமாறு “அரசு சிறப்பு விசாரணைக்குழு அமைத்து ஜெயலலிதா மரணத்திலுள்ள உண்மைகளை வெளிக்கொணர வேண்டும். 
சந்தேகத்திற்கு இடமான மரணம் என வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்டவர்களை விசாரிக்க வேண்டும். மருத்துவமனையை உல்லாச விடுதியாக்கி தங்கி ரூ.1 கோடிக்கு மேல் இட்லி, தோசை சாப்பிட்டது யார், சசிகலா குடும்பம். சசிகலா தவிர அவரது குடும்பத்தினர் அனைவரையும் ஜெயலலிதா ஒதுக்கி வைத்திருந்தார் .
 
ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை ஏன் செய்யவில்லை? செய்ய வேண்டாம் என சொன்னது யார்?. ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது எங்களை யாரும் பார்க்க அனுமதிக்கவில்லை . ஜெயலலிதாவுக்கு முறையாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் உயிரோடு இருந்திருப்பார்.
 
ஜெயலலிதா மரணம் குறித்து சுகாதாரத்துறை செயலாளரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும். ஜெயலலிதா மரணம் குறித்து ராதாகிருஷ்ணன் முன்னுக்குப்பின் முரணான தகவல் தருவதாகவும்  புகார் தெரிவித்து உள்ளார்
 
நடக்காத கேபனிட் மீட்டிங்கை நடந்ததாக கூறிய முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன் ராவையும் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்றும் கோபமுடன் அவர் கூறி உள்ளார்
 
இதன் முலம் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பது உறுதியாகி உள்ளது எனவும் அதிமுக அமைச்சர் கூறிய நிலையில் சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார்”
 
அதே நேரத்தில் அதிமுக சட்ட அமைச்சர் பகீர் குற்றசாட்டுக்கு ஆளான  ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் கூறிய கருத்துக்கு பதிலளிக்க வேண்டிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் சொல்ல  மறுப்பு தெரிவித்துள்ளார்.