அணு ஆயுத தயாரிப்பில் இருந்து வடகொரியா தன்னை சிறிய அளவில் கூட மாற்றிக்கொள்ளவில்லை என்று ஐ.நா. அமைத்த சிறப்பு குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணு ஆயுதங்கள் தயாரிப்பு, மற்றும் ஏவுகனை சோதனைகளை வடகொரியா தொடர்வதால் அந்நாட்டின் மீதான பொருளாதார தடை நீடிக்கிறது. இந்த நிலையில் ஜுன் 12-ம் தேதி சிங்கப்பூரில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கும் இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அப்போது அணு ஆயுத தயாரிப்பை நிறுத்திக்கொள்வதாகவும், அணு உற்பத்தி மையங்களை அழிக்கவும், அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக்கொண்டார்.
இதனிடையே வடகொரியா மீது ஐ.நா. விதித்திருந்த நிபந்தைகள் தொடர்பாக 6 மாதங்களாக ஆய்வு செய்த நிபுணர்கள் குழு அதற்கான அறிக்கையை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தாக்கல் செய்துள்ளது.
அதில் எந்த நிபந்தனைகளையும் வடகொரியா ஏற்கவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளத்தனமாக 100 கோடி டாலர் ஜவுளி ஏற்றுமதி செய்ததோடு சிரியாவுடன் சேர்ந்து ஏமன் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களை விற்க வடகொரிய முயன்று வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எனவே வடகொரியா மீதான தடைகளை கடுமையாக்க அந்த குழு பரிந்துரை செய்துள்ளது.