ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழுவை சேர்ந்த வழக்கறிஞர் ஹரிராகவன், மைக்கேல் தனிஸ் ஆகியோர் தற்போது கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.
 
முன்னதாக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதை எதிர்த்து வரும் சமூக செயல்பாட்டாளர் சந்தோஷ் என்பவர் புதூர் பாண்டியாபுரம் டோல்கேட் பகுதியில் கைது செய்யப்பட்டார்.
 
அதிமுக ஆட்சியில் போலீசாரின் இந்த கைது நடவடிக்கையைக் கண்டித்து பொதுமக்கள் நேற்று பிற்பகல் தொடங்கி நள்ளிரவைத் தாண்டியும் விடிய விடிய கொட்டும் பனியிலும் முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.
 
இதில் பங்கேற்ற ஹரிராகவன் மற்றும் மைக்கேல் ஆகியோர் போராட்டம் நடத்த மக்களை தூண்டியதாக புகார் சொல்லிய காவல் துறை
 

தூத்துகுடியில் 13 பேரை துப்பாக்கி சூட்டில் கொன்றதை சொல்லும் கார்டூன் படம்

இதனை தொடர்ந்து இவர்கள் இருவரையும் அதிகாலையில் பண்டாரப்பட்டியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
 
திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் மந்திரிசபை கூட்டி கொள்கை முடிவு எடுக்க கோரியும் அதனை செய்யமால் பேருக்கு அரசானை ஒன்றை போட்டதால் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்து.
 
அதற்கு உச்சநீதிமன்றமும் ஒப்புதல் அளித்ததன் தொடர்ச்சியாக, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் ஜனவரி மாதத்தில் திறக்கப்போவதாக ஸ்டெர்லைட் நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
அதற்கான ஆயத்தப் பணிகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் செய்து வந்த நிலையில், ஆலை திறப்பை எதிர்த்துப் போராடும் முன்னணியாளர்களைக் குறிவைத்து கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
 
இதை தொடந்து போலியாக நடந்து வரும் அதிமுக அரசை கண்டித்து கைதானவர்களை விடுவிக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.