32 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு சொந்த மைதானத்தில் இளம் இந்திய கிரிக்கெட் அணி தோற்கடித்துள்ள நிலையில், வெற்றிக் கோப்பையை கேப்டன் ரஹானே, தமிழக வீரர் நடராஜனிடம் கொடுத்து கவுரவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர்கள் களம் கண்டு 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியத் தொடரை வென்று சாதனை படைத்து, பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றுள்ளனர்.

கடந்த 1988ல் இருந்து இந்த மைதானத்தில் நடைபெற்ற 28 டெஸ்ட் போட்டிகளை ஆஸ்திரேலியா வென்றிருந்தது. காபா டெஸ்ட் போட்டி டிராவானால் கூட அது ஆஸ்திரேலியாவின் தோல்வி என சொல்லி இருந்தார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். ஆனால் மெல்பேர்ன், காபா என இரண்டு மைதானங்களில் இந்தியா வெற்றி பெற்று,

சுமார் 32 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவின் சொந்த மண்ணில் அவர்களை வீழ்த்திய பெருமையையும் கேப்டன் அஜின்கியா ரஹானே தலைமையிலான இளம் கிரிக்கெட் வீரர்கள் பெருமையை பெற்றுள்ளனர்.

[su_image_carousel source=”media: 21583,21584,21582″ crop=”none” captions=”yes” autoplay=”3″ image_size=”full”]

இதனையடுத்து பார்டர்-கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி 9வது முறையாக வென்றுள்ளது. பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடிய இந்திய வீரர் ரிஷப் பந்த் ஆட்ட நாயகன் விருதையும் ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ் தொடர் நாயகன் விருதையும் பெற்றனர்.

இறுதியாக சாம்பியன்ஸ் கோப்பையை பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரஹானே, இந்தத் தொடரில் அறிமுகமாகி சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்திய தமிழக வீரரான நடராஜனை அழைத்து கோப்பையை வழங்கி கவுரவித்தார். இந்த நிகழ்வு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் வெற்றி குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னே, முக்கியமான தருணங்களை நாங்கள் தவறவிட்டோம்; ஆனால் இந்தியாவோ அத்தகைய தருணங்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டது என்று தெரிவித்து உள்ளார்.

இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்று வரலாற்று சாதனை