• எந்த ஊடகத்தாலும் கேள்வி கேட்கப்படாத முதலில் பார்த்த வாட்ச்மேன்..
  • எந்த ஊடகத்தாலும் கேள்வி கேட்கப்படாத முதலில் பார்த்த மருத்துவர்..
  • எந்த ஊடகத்தாலும் கேள்வி கேட்கப்படாத அவருக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்கள்.. போகட்டும் அவையெல்லாம் என குழம்பி புலம்பி புறம் தள்ளினாலும்..
  • காரண காரியம் ஏதும் அறியப்படாமல் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வரும் முன்னே புதைக்கப்படும் நீதியின் நீட்சி..
  • அன்று கண்ணகி அல்லலுற்று கையில் எடுத்த சிலம்பிலும் எரிந்தது மதுரை..
  • இன்று ஸ்ரீமதி மௌனத்திலும் விடையற்ற கேள்விகளால் பற்றி எரிந்தது கள்ளக்குறிச்சி பள்ளி..
  • அரசியல் கட்சிகள் என்று இல்லை காவல்துறை என்று இல்லை ஊடகத்துறை என்று இல்லை நீதித்துறை என்று இல்லை..

அத்தனையும் நன்றாய் படித்த பிள்ளை ஏன் இன்று இல்லை என்ற கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாமல்..
தற்கொலை தற்கொலை என்று கீறல் விழுந்த ரெக்கார்டு ஆகி அடுத்த இலக்கை நோக்கி செல்லாமல் தடுமாற..
மௌனித்து செல்கிறாள் ..
புத்தகமுடன் மண்ணுக்குள் ஸ்ரீமதி..

சட்டம் ஒழுங்கு என்ற குடைக்குள் கட்டுண்டு விக்கித்து நாம் நிற்க..
மௌனித்து செல்கிறாள் ..
புத்தகமுடன் மண்ணுக்குள் ஸ்ரீமதி..

செயலற்றவர்கள் செய்வதறியாது கண்களில் கண்ணீர் வடிய..
இயங்க மறுத்தவர்கள் இயலாமையில் இதயங்கள் விம்ம..
மௌனித்து செல்கிறாள் ..
புத்தகமுடன் மண்ணுக்குள் நம் ஸ்ரீமதி..

சமூக வலைதள பக்கத்தில் காண: https://www.facebook.com/savenra/posts/pfbid02zu5uQYHzuXBhx3t5edEJJ4wp55hqyXbw5J8itFoa7HE3kgvU9EGXXXteBi8eFveel