தமிழகத்தில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி சரக்கு, பயணி பேருந்துகள், உழுவை மற்றும் இழுவை இயந்திரம், இருசக்கர வாகனம், ஆம்புலன்ஸ் என 2.56 கோடிக்கும் அதிகமாக வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கிறது. இவ்வாறு உள்ள வாகனங்களை இயக்குவதற்கு இந்திய சட்டத்தின்படி, அனைத்து வாகன ஓட்டிகளும் அவசியம் ‘லைசென்ஸ்’ வைத்திருக்க வேண்டும்.
 
அதன்படி ஒவ்வொருவரும் தங்களது பகுதியில் உள்ள ஆர்டிஓ அலுவலகங்களுக்கு சென்று, உரிய சான்றிதழ்களை சமர்பித்து ‘லைசென்ஸ்’ பெற்று வருகின்றனர்.
 
முன்பு ஆர்டிஓ அலுவலகங்களுக்கு சென்று தான் ‘லைசென்ஸ்’க்கு விண்ணப்பிக்க முடியும். கடந்த ஆண்டு அக்டோபர் முதல் ‘ஆன்லைன்’ முறையில் ‘லைசென்ஸ்’க்கு விண்ணப்பித்தல், வாகனத்திற்கு வரி செலுத்துதல் வசதி கொண்டுவரப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 
இத்திட்டம் கடந்த ஜனவரி, 1ம் தேதி முதல் அனைத்து ஆர்டிஓ அலுவலகத்திலும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டில் இருந்தபடியே விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
 
தமிழகத்தில் ஆண்டுதோறும் புதிதாக ‘லைசென்ஸ்’ எடுப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி கடந்த,
 
1995-96 காலக்கட்டத்தில், 2 லட்சத்து, 44 ஆயிரத்து, 250 பேரும்,
 
1996-97ல், 3 லட்சத்து, 22 ஆயிரத்து 535 பேரும்,
 
97-98ல், 3 லட்சத்து 34 ஆயிரத்து 302 பேரும்,
 
98-99ல் 3 லட்சத்து, 70 ஆயிரத்து, 869 பேரும்,
 
99-2000ல், 4 லட்சத்து, 26 ஆயிரத்து, 690 பேரும்,
 
2000-01ல், 4 லட்சத்து, 10 ஆயிரத்து 125 பேரும்,
 
20001-02ல், 4 லட்சத்து 8 ஆயிரத்து 957 பேரும்,
 
2002-03ல் 4 லட்சத்து 25 ஆயிரத்து 693 பேரும்,
 
2003-04ல் 4 லட்சத்து, 50 ஆயிரத்து, 188 பேரும்,
 
2004-05ல், 4 லட்சத்து 62 ஆயிரத்து 941 பேரும்
 
2005-06ல், 5 லட்சத்து, 33 ஆயிரத்து, 739 பேரும்,
 
2006-07ல், 6 லட்சத்து, 61 ஆயிரத்து, 490 பேரும்,
 
2007-08ல், 7 லட்சத்து, 65 ஆயிரத்து, 580 பேரும்,
 
2008-09ல், 7 லட்சத்து, 4 ஆயிரத்து, 359 பேரும்,
 
2009-10ல், 7 லட்சத்து, 93 ஆயிரத்து, 784 பேரும்,
 
2010-11ல், 8லட்சத்து, 45 ஆயிரத்து, 484 பேரும்
 
2011-12ல், 9 லட்சத்து, 18 ஆயிரத்து, 985 பேரும்,
 
2012-13ல், 9 லட்சத்து, 46 ஆயிரத்து, 343 பேரும்,
 
2013-14ல், 9 லட்சத்து, 27 ஆயிரத்து 271 பேரும்,
 
2014-15ல், 9 லட்சத்து, 74 ஆயிரத்து, 855 பேரும்,
 
2015-16ல், 9 லட்சத்து 61 ஆயிரத்து 771 பேரும்,
 
2016-17ல், 8 லட்சத்து, 31 ஆயிரத்து, 19 பேரும்,
 
2017-18ல் அதிகபட்சாக, 10 லட்சத்து பேரும் , 40 ஆயிரத்து 496 பேரும் ‘லைசென்ஸ்’ பெற்றுள்ளனர்.
 
ஆனாலும் இவ்வாறு தொடர்ந்து ‘லைசென்ஸ்’ பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சாலை வசதிகளை மேம்படுத்துவதில் அரசு போதிய கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 
இதனால் விபத்துக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு, 59 ஆயிரத்து, 277 விபத்துக்கள் நடந்துள்ளது. இதில், 11 ஆயிரத்து, 266 பேர் இறந்துள்ளனர்.
 
எனவே சாலை வசதிகளை மேம்படுத்துவதற்கு அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.