அரசியல் தமிழ்நாடு

ராஜேஷ் லக்கானி உள்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்; தமிழக அரசு

ராஜேஷ் லக்கானி உள்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகளை திடீர் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு நவம்பர் 28 பிறப்பித்த உத்தரவில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் மாற்றப்பட்டு வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை செயலராக பதவி வகிக்கும் ராஜேஷ் லக்கானி மாற்றப்பட்டு, தமிழ்நாடு ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வேளாண் விற்பனை, வேளாண் வணிகத்துறை ஆணையர் ஷன்சொங்கம் ஜடாக் சிரு மாற்றப்பட்டு, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை போக்குவரத்துக்கு காவல்துறையின் வினோத அறிவிப்பால் வெடிக்கும் சர்ச்சை

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.