ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை என்ற பதாகையை வைக்க வேண்டும் என்று பெட்ரோல் பங்குகளுக்கு சென்னை போக்குவரத்து காவல்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.

தமிழகத்தில் ஹெல்மெட் குறித்த பலவேறு விழிப்புணர்வுகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தொடர்ந்து ஹெல்மெட் இன்றி சாலைகளில் வலம் வருவோரின் எண்ணிக்கை குறையவே இல்லை.

இந்நிலையில், ஹெல்மெட் மற்றும் கார் சீட் பெல்ட் அணியாவிட்டால் பெட்ரோல், டீசல் இல்லை என்ற வாசகம் அடங்கிய பதாகையை பெட்ரோல் பங்குகளில் காட்சிப்படுத்த வேண்டும் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை ஆணையர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட பெட்ரோல் சப்ளை அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்க போக்குவரத்து காவல்துறை ஆணையர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வைப் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சென்னை மேற்கு, வடக்கு, தெற்கு போக்குவரத்து துணை ஆணையர்கள் தங்கள் சரகத்துக்குள் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் தற்போது சென்னையில் மட்டுமே இந்த உத்தரவை அமல்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த உத்தரவை அமுல்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக மூத்த வழக்கறிஞர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய தொழில்நுட்பத்துடன் கொரோனா கவச உடை; ஆவடி CRPF தலைமை அதிகாரி அசத்தல்